Aran Sei

ஜம்மு காஷ்மீரில் கோவில் கட்ட திருப்பதி தேவஸ்தனத்திற்கு 62 ஏக்கர் நிலம் – 40 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கி அரசு உத்தரவு

ம்மு காஷ்மீர் அரசு திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்திற்கு கோவில் கட்டிக்கொள்ள 40 ஆண்டுகள் 62 ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு தர அறிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் – உரிமையை இழந்த மக்களின் கதை

ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் மனோஜ் சின்ஹா தலைமையிலான நிர்வாகக் குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்தக் குழுவின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்திற்கு 40 ஆண்டுகள் குத்தகைக்கு விடப்பட்டுள்ள 62 ஏக்கர் நிலத்தில் கோவில்கட்டிக்கொள்ளவும், வேதபாடசாலை அமைக்கவும், தியான மணடபங்கள் கட்டிக்கொள்ளவும் அனுமதி அளித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.

ஜம்மு காஷ்மீர் போராட்டதின் எதிரொலி: 4ஜி இன்டர்நெட் சேவைக்கு தடையை நீட்டித்த அரசு

மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுலா துறையை ஊக்குவிக்கவும், பொருளாதார உற்பத்தியை ஊக்குவிக்கவும், இந்த இடத்தை வழங்கியுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரோஹிங்கிய அகதிகளை வெளியேற்றும் ஜம்மு காஷ்மீர் அரசு – மியான்மர்க்கு திருப்பி அனுப்ப திட்டம்

மாதா வைஷ்ணவ தேவி கோவில் மற்றும் அமர்நாத் ஆலயம் வரும் பக்தர்களை ஈர்க்கும் வகையில் திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்திற்கு இந்த நிலம் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் மனோஜ் சின்ஹா தலைமையிலான நிர்வாகக் குழுவின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில்
கூறப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பந்தஸ்த்தை மத்திய அரசு நீக்கியது.  இந்தச் செயல், அம்மாநிலத்தின் வளங்களை  கார்பரேட் முதலாளிகளுக்கும் பணக்கார்ர்களுக்கும்  விற்பதற்கான மத்திய அரசின் ஏற்பாடு என்று எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்