Aran Sei

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தின் வழியே பிரிவினையைத் தூண்டும் பாஜக – மெகபூபா முப்தி விமர்சனம்

தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை பாஜகவினர் கொண்டாடி வரும் நிலையில், இத்திரைப்படத்தின் வழியாக பாஜக பிரிவினையைத் தூண்டுவதாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி விமர்சித்துள்ளார்.

ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து, விவேக் அக்னிஹோத்ரி எழுதி இயக்கிய இந்தத் திரைப்படம் மார்ச் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் அனுபம் கெர், தர்ஷன் குமார், மிதுன் சக்ரவர்த்தி மற்றும் பல்லவி ஜோஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தி காஷ்மீர் ஃபைல்ஸ் (The Kashmir Files) படத்தைப் பார்க்க, காவல்துறையினருக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று மத்தியப் பிரதேச பாஜக அரசு அறிவித்திருந்தது.

தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் பார்க்க காவல்துறையினருக்கு விடுமுறை – மத்தியப் பிரதேச முதலமைச்சர் அறிவிப்பு

உத்தரப்பிரதேசம், ஹரியாணா, உத்தரகாண்ட், கோவா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்கள் இந்த திரைப்படத்துக்கு கேளிக்கை வரி இல்லை என அறிவித்தன.

கோவா மாநிலத்தின் தற்காலிக முதலமைச்சர் பிரமோத் சாவந்த், தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை ஆதரித்துள்ளதோடு, கோவாவில் அதிக எண்ணிக்கையிலான காட்சிகளை திரையிடப்படும் என்று தெரிவித்திருந்தார்.

தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை பாஜகவினர் நாடு  முழுவதும் கொண்டாடி வரும் நிலையில், இத்திரைப்படத்தின் வழியாக பாஜக பிரிவினையைத் தூண்டுவதாக மெகபூபா முப்தி விமர்சித்துள்ளார்.

தி காஷ்மீர் ஃபைல்ஸ் விவகாரம்: ‘தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்டும் அண்ணாமலை’ –செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

இது குறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில்  கருத்து தெரிவித்துள்ள மெகபூபா முப்தி, “தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை ஒன்றிய அரசு ஆக்ரோஷமாக ஊக்குவிப்பதன் வழியாக காஷ்மீர் பண்டிட்களின் வலியை ஆயுதமாகப் பயன்படுத்தும் அவர்களின் தவறான உள்நோக்கம் வெட்ட வெளிச்சமாகிறது” என்று கூறியுள்ளார்.

“பழைய காயங்களுக்கு மருந்திட்டு, இரு சமூகத்தினரிடையே இணக்கமான சூழலை உருவாக்குவதற்கு மாறாக, இரு சமூகத்தினரையும் அவர்கள்  பிளவுற செய்கிறார்கள்” என்று மெகபூபா முப்தி விமர்சித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்