காஷ்மீரை சேர்ந்த சில இளைஞர்கள் தாலிபான்களுடன் இணைவதாக பரவும் செய்திகள் முற்றிலும் பொய்யானது என்று ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) தில்பாக் சிங் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமை காஷ்மீரில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்று கேள்விக்கு, “இதில் கவலைப்பட ஒன்றுமில்லை. எல்லாம் நன்றாகவே இருக்கிறது.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று (செப்டம்பர் 3), வடக்கு காஷ்மீரில் உள்ள பாரமுல்லா மற்றும் சோபூர் நகரங்களையும், தெற்கு காஷ்மீரில் அனந்த்நாக் மற்றும் புல்வாமாவையும் தில்பாக் சிங் பார்வையிட்டுள்ளார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய தில்பாக் சிங், “சமூக வலைதளங்களில் காஷ்மீரை சேர்ந்த சில இளைஞர்கள் தாலிபான்களுடன் இணைவதாக போலி செய்திகளை பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் சார்பு ஏஜெண்டுகள் பரப்புரையாக செய்கின்றனர்.” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், “எல்லாம் நன்றாக இருக்கிறது. காஷ்மீர் இளைஞர்கள் கிரிக்கெட், கைப்பந்து, ரக்பி விளையாடுகிறார்கள். அந்தப் புகைப்படங்களை நீங்கள் பார்க்கவில்லையா? இங்குள்ள ஒவ்வொரு குழந்தையும் தனது எதிர்காலத்தை பாதுகாக்க விரும்புகிறார்கள். யாரும் அவ்வழியில் செல்லவில்லை.” என்று அவர் கூறியுள்ளார்.
Source: PTI
தொடர்புடைய பதிவுகள்:
அரண்செய் சிறப்பிதழ் – ஆப்கானிஸ்தான்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.