ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் சோதனைச் சாவடி அருகே நிற்காத கார்மீது சிஆர்பிஎஃப் படையினர் துப்பாக்கியால் சுட்டதில் காரில் வந்தவர் உயிரிழந்துள்ளார்.
சோதனைச் சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஎஃப் படையினர், அந்த வழியாக வந்த ஸ்கார்பியோ காரை நிறுத்த சைகை காட்டியபிறகும் நிறுத்தாமல் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக காஷ்மீர் மண்டல காவல்துறை பதிவிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், “மங்ஹோல் பாலம் பகுதியில் சிஆர்பிஎஃப்பின் 40வது பட்டாலியன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்து. அந்த வழியாக நம்பர் பிளேட் இல்லாமல் வந்த வாகனத்தை நிறுத்துமாறு அதிகாரிகள் செய்கை காட்டியபோது, கார் நிற்காமல் சோதனைச் சாவடியை நோக்கிச் சென்றதால் அதிகாரிகள் தற்காப்பிற்காக சுட்டனர்.” என பதிவிட்டுள்ளனர்.
A Naka was established by 40Bn CRPF at Monghal Bridge .A suspected vehicle without number was signalled to stop by the Naka party, however, it rushed towards the Naka party. It was then challenged by the on duty troops.
(1/2) pic.twitter.com/wC4JN5RXEg— Kashmir Zone Police (@KashmirPolice) October 7, 2021
வாகனத்தின் ஓட்டுநர் தப்பிச் சென்று விட்டதாகவும், உயிரிழந்தவரின் யார் என்று இன்னும் அடையாளம் காணப்படவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் ஜம்மு பகுதியைச் சேர்ந்த ஜாகர் கோட்லி என்று முதற்கட்ட புலனாய்வில் தெரியவந்திருப்பதாக கிரேட்டர் காஷ்மீர் செய்தி வெளியிட்டுள்ளது.
சிஆர்பிஎஃப் வீரர்கள் செயலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள ஸ்ரீநகர் மேயர் அசிம் மட்டு, இந்தச் சம்பவம் முறையற்ற மற்றும் நியாயமற்ற அதிகாரப் பயன்பாட்டின் வெளிப்பாடு என தெரிவித்துள்ளார்.
In the killing of the civilian at Monghal, Anantnag resulting from firing by a CRPF party – the culprit/s is/are known and identified.
Action against those responsible should be prompt and justice should not only be done but seen to be done! https://t.co/vI2TtBOwqU
— Junaid Azim Mattu (@Junaid_Mattu) October 7, 2021
குற்றத்தில் ஈடுபட்டவர்கள் சிஆர்பிஎஃப் படையினராக இருந்தாலும், அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
Source : PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.