Aran Sei

காஷ்மீர் அமெரிக்க தினம் – நியூயார்க் சட்டமன்றத்தில் நிறைவேறிய தீர்மானம்

பிப்ரவரி 5 ஆம் தேதியைக் காஷ்மீர் அமெரிக்க தினமாக அறிவித்து நியூயார்க் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

காஷ்மீர் அமெரிக்க தினமாகப் பிப்ரவரி 5 ஆம் தேதியை அறிவிக்கக் கோரி நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோவிடம் அளிக்கப்பட்ட மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு தீர்மானமாகப் பிப்ரவரி 3 ஆம் தேதி நியூயார்க் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நியூயார்க்கில் இருக்கும் பாகிஸ்தான் தூதரகம் தங்களது சமூக வலைதள பக்கத்தில், பிப்ரவரி 5 ஆம் தேதி காஷ்மீர் ஒற்றுமை நாளாகக் கடைபிடிக்கப்பட்டு வருவதாகவும், நியூயார்க்கில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதில் பாகிஸ்தானிற்கு பங்கிருக்கிறது எனக் குறிப்பிட்டப்பட்டிருக்கிறதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவருக்கு ஜாமீன் – கொண்டாடப்படவேண்டிய தீர்ப்பா?

தீர்மானத்தில் சொல்லப்பட்டது போல ஆளுநர் கடைபிடித்தால், இந்தியாவின் விளக்கத்தைத் தாண்டிக் காஷ்மீரை பிரச்னைபற்றிய புரிதல் ஏற்பட வாய்ப்பிருப்பதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனநாயக கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் நாடெர் சாயேக் மற்றும் நிக் பெர்ரி முன்மொழிந்த தீர்மானத்தில், “துன்பங்களைத் தாண்டி, விடாமுயற்சியுடன் இருக்கும், காஷ்மீர் சமூகம், நியூயார்க்கில் இருக்கும் புலம்பெயர் சமூகங்களின் தூண்களில் ஒன்றாக விளங்குகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாக, தி ஹிந்து வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகெங்கிலும் வாழும் காஷ்மீர் மக்கள் கோஷூர் மொழியைப் பேசுகின்றனர்;  இஸ்லாம், இந்து மதம் மற்றும் சீக்கியம் ஆகியவற்றின் தனித்துவமான பழங்கால சடங்குகளைக் கடைப்பிடிக்கின்றனர்; இமயமலை அடிவாரத்திலும், பிர் பஞ்சால் மலைத்தொடரிலும் வேர்களைக் கொண்ட அவர்களின் தனித்துவமான கலாச்சார அடையாளம் மற்றும் வரலாற்றை அங்கீகரிப்பதன் மூலம் காஷ்மீரின் அடையாளத்தை உயிரோடு வைத்திருக்க உதவுகிறது, ”எனத் தீர்மானத்தில் இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நகைச்சுவை கலைஞர் முனாவரை வெளிவிட மறுத்த சிறை நிர்வாகம்- உச்சநீதிமன்ற தலையீட்டால் நள்ளிரவில் பிணையில் விடுதலை

“பல்வேறு அரசியல், இன மற்றும் மத அடையாளங்களை நியூயார்க் மாகாணம் அங்கீகரிப்பதன் மூலம், அமெரிக்க அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ளதை போல  அனைத்து காஷ்மீர் மக்களுக்கும் மதம், இயக்கம் மற்றும் உணர்வு  சுதந்திரம் உள்ளிட்ட மனித உரிமைகளை வென்றெடுக்க முயற்சிக்கிறது,” எனத் தீர்மானம் கூறுவதாக தி ஹிந்திவின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசு இந்தத் தீர்மானம் தொடர்பாகத் தங்கள் கருத்தைத் தெரிவித்திருப்பதோடு, அனைத்து விசயங்களிலும் நியூயார்க் அதிகாரிகளுடன் பணியாற்றத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ள ராணுவம் – மாநிலத்திற்கு அதிகரித்த நிதிச்சுமை

“காஷ்மீர் அமெரிக்க தினம் தொடர்பான நியூயார்க் சட்டமன்ற தீர்மானத்தை நாங்கள் கண்டோம். அமெரிக்காவைப் போலவே, இந்தியாவும் ஒரு துடிப்பான ஜனநாயகம் மற்றும் 1.35 பில்லியன் மக்களின் பன்மைத்துவ நெறிமுறைகளைக் கொண்ட நாடு. இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் அழிக்க முடியாத பகுதியாக இருக்கும் ஜம்மு-காஷ்மீர் உட்பட இந்தியா அதன் பன்முகத்தன்மை மற்றும் உயர் கலாச்சார இனக்குழுக்களைக் கொண்டாடுகிறது, “என்று வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் தி ஹிந்து விடம் தெரிவித்துள்ளார்.

பங்குகளை விற்பதன் மூலம் நிதி திரட்ட திட்டம் – இந்த காலாண்டிற்குள் ரூ3,200 கோடி திரட்ட பஞ்சாப் நேஷன்ல் வங்கி திட்டம்

“ஜம்மு-காஷ்மீரின் உயர் கலாச்சார மற்றும் சமூக இனக்குழு மக்களைப் பிளவுபடுத்துவதற்காகச் உங்களது சொந்த நலன்களின் முயற்சியை நாங்கள் கவனத்துடன் கவனிக்கிறோம். இந்தியா-அமெரிக்க கூட்டாண்மை மற்றும் பல்வேறு இந்திய புலம்பெயர்ந்தோர் தொடர்பான அனைத்து விஷயங்களிலும் நியூயார்க் மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் நாங்கள் ஈடுபடுவோம், ”என்று இந்திய தூதரக செய்தித் தொடர்பாளர் கூறியதாக, தி ஹிந்து கூறியுள்ளது.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்