Aran Sei

முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தை ஏற்க மறுக்கும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை முதல்வருக்கு கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கோரிக்கை

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை ஏற்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கோரிக்கை வைத்துள்ளார்.

வேட்பாளர் தேர்வில் குழப்பம், போராட்டம்: ‘காங்கிரஸில் பணமிருந்தால்தான் சீட் – ஜோதிமணி விமர்சனம்

இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டானிற்கு அவன் எழுதியிருக்கு கடிதத்தில், ”மக்களை வாட்டி வதைக்கும் கொரோனா நோய் பரவலை தடுக்க தமிழ்நாடு அரசு எடுத்து வரும் விரிவான நடவடிக்கைகள் நம்பிக்கை அளிக்கின்றன. இக்காலத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம் மூலம் சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகள் குறித்து தங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

”கொரோனா சிகிச்சை மட்டுமல்லாது, இதய அறுவை சிகிச்சை, மூளை அறுவை சிகிச்சை உள்ளிட்ட உயிர்காக்கும் அறுவை சிகிச்சைகளுக்கும் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம் செல்லாது என்று தனியார் மருத்துவமனைகள் தொடர்ந்து தெரிவித்து வருவதாக நாள்தோறும் பல்வேறு மக்களிடம் இருந்து புகார்கள் வருகின்றன. ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த இக்கட்டான நேரத்தில், தனியார் மருத்துமனைகள் இவ்வாறு இரக்கமற்ற கொள்ளையில் ஈடுபடுவது வருத்தம் அளிக்கிறது” என கூறியுள்ளார்.

`இந்தியா எதிர்கொள்ளும் சவாலே மோடியின் ஆட்சிதான்’ – ஜோதிமணி

”எனவே, தமிழ்நாடு அரசு, உடனடியாக தலையிட்டு, இத்திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளையும், அரசாணைகளையும் அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கும் மீண்டும் அனுப்பி அவற்றை சரியாக பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். மேலும் மாவட்ட அளவில், குழு அமைத்து இத்திட்டம் முறையாக நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என அந்த கடிதத்தில் ஜோதிமணி குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்