Aran Sei

கரூர்: சாதி ரீதியாக பாகுபாடு காட்டப்படுகிறது – பட்டியல் சமூக ஊராட்சி மன்ற தலைவர் காவல்நிலையத்தில் புகார்

சாதி ரீதியான பாகுபாடு காட்டப்படுவதாகவும் பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும்  ஆதிக்கச்சாதியினர் மீது கரூர் மாவட்டத்தில் உள்ள பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்

கரூர் மாவட்டம் கரூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நன்னியூர் ஊராட்சியில் தலைவர், துணைத் தலைவர் உட்பட 10 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் திமுகவைச் சேர்ந்த 5 உறுப்பினர்கள் மற்றும் அதிமுகவை சேர்ந்த 5 உறுப்பினர்கள் என சம நிலையில் உள்ளனர். ஊராட்சிமன்ற தலைவராக உள்ள சுதா பட்டியல் வகுப்பை சேர்ந்தவர்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு – மருத்துவ விடுப்பு வேண்டி தமிழக முதலமைச்சருக்கு ராபர்ட் பயஸ் கடிதம்

இந்த நிலையில், வாங்கல் காவல் நிலையத்தில் நேற்று மாலை ஊராட்சிமன்ற தலைவ தலைவர் சுதா புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் நான் என்னுடையை கடமையை செய்யவிடாமல் குறுக்கீடு செய்து, மன உளைச்சலை ஏற்படுத்தி சாதி ரீதியாக பாகுபாடு செய்கிறார் 9-வது வார்டு உறுப்பினர் நல்லுசாமி (அதிமுக).

ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அடிக்கடி வந்து அலுவலகப் பணியை செய்வதில் இடையூறு ஏற்படுத்தி வருகிறார் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குமாரசாமி (திமுக).

உத்தரகாண்ட்: சிறுமி கொலை வழக்கில் பாஜக தலைவரின் மகன் கைது

அலுவலகப் பணியில் ஊராட்சி செயலர் நளினி ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. மேலும் அவருடைய கணவர் மூர்த்தி என்பவர் தேவையில்லாமல் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குள் வந்து, கம்ப்யூட்டர் ஆபரேட்டர் என்று கூறி ஊதியம் கேட்டு வருகிறார். சம்பந்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த நபர்களின் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அந்தப் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புகார் மனுவை ஏற்று நேற்று நன்னியூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலர் லீலாகுமார்  மற்றும் கரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர்: பிரிவு 370 ரத்துக்கு எதிரான வழக்கு – தசரா பண்டிகைக்குப் பின் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தகவல்

தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவி சுதாவை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, வாங்கல் காவல் நிலையம் அழைத்துச் சென்று காவல் உதவி ஆய்வாளர் உதயகுமார் முன்னிலையில் விசாரணை நடத்தியுள்ளனர். புகார் மனு மீது விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணையின் முடிவில் உண்மை தன்மை மற்றும் புகார் குறித்து விரிவாக தெரிவிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

kallakurichi sakthi school student case has led to adverse effect on students | Villavan Ramadoss

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்