Aran Sei

கர்நாடகா: ‘சலாம் மங்களராத்தி’ சடங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்த விஷ்வ ஹிந்து பரிஷத்

ர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கோவில் திருவிழாக்களில் கடைகளை அமைக்க இஸ்லாமிய வியாபாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகை கோவிலில் ‘சலாம் மங்களராத்தி’ என அழைக்கப்படும் சடங்கிற்கு விஷ்வ ஹிந்து பரிஷத் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, ஸ்ரீ மூகாம்பிகை கோவில் கமிட்டிக்கு அளித்துள்ள மனுவில், “இந்த சடங்கு ஒரு பிரதோஷ பூஜை. ஆனால், 18ஆம் நூற்றாண்டில் இருந்து இது ‘சலாம் மங்களராதி’ என்று அழைக்கப்படுகிறது. இது அடிமைத்தனத்தின் அடையாளம்” என்று விஷ்வ ஹிந்து பரிஷத் செயலாளர் ஷரன் பம்ப்வெல் கூறியுள்ளார்.

கர்நாடகா: இஸ்லாமிய வியாபாரிகள் மீது வலதுசாரிகளின் வகுப்புவாத தாக்குதல் – தெருவோர வியாபாரிகள் சங்கம் கண்டனம்

“இந்த சடங்கு தொடர வேண்டும். ஆனால் அதை ‘சலாம் மங்களராத்தி’ என்று அழைக்கக்கூடாது. இதை சீரமைக்க அறநிலையத்துறை அமைச்சர் சசிகலா ஜொல்லே மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ரோகிணி சிந்துரி ஆகியோரை வலியுறுத்துகிறோம்” என்று விஷ்வ ஹிந்து பரிஷத் செயலாளர் ஷரன் பம்ப்வெல் கூறியுள்ளார்.

Source: New Indian Express

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்