Aran Sei

’சீனா என்ற வார்த்தையை உச்சரிக்க அஞ்சுகிறாரா பிரதமர் மோடி?’ – கார்த்திக் சிதம்பரம்

சீனா என்ற வார்த்தையை உச்சரிக்க பிரதமர் மோடி அஞ்சுகிறாரா என்று நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று (பிப்பிரவரி 13), சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தியா, சீனா எல்லையில் என்ன நடக்கிறது என்ற உண்மையைப் பிரதமர் மோடி இதுவரை சொல்லவில்லை. சீனா என்ற வார்த்தையைக் கூட அவர் உச்சரிப்பதில்லை. அஞ்சுகிறாரா? என்ற சந்தேகம் உள்ளது. அதனால் உண்மை நிலையை நாடாளுமன்ற கூட்டுக்குழு மூலம் தெரியப்படுத்த வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.

ஐஐடி-களில் அநியாயமாக மறுக்கப்படும் இட ஒதுக்கீடு –  ஆர்டிஐ மூலம் கிடைத்த அதிர்ச்சி தகவல்

“பெட்ரோலுக்கு மத்திய அரசு செஸ்வரி விதித்துள்ளது. மற்ற வரிகளை மாநிலத்திற்குப் பங்கிட வேண்டும். ஆனால் செஸ் வரியைப் பங்கிடத் தேவையில்லை. முழுமையாக மத்திய அரசே வைத்துக் கொள்ளலாம். மத்திய அரசு பொருளாதாரம் நடத்தும் விதத்தைப் பார்க்கும்போது பெட்ரோல் விலை குறைய வாய்ப்பில்லை.” என்று கார்த்திக் சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை திரும்ப பெறுங்கள் – மத்திய அரசிடம் ஆளும் சிவசேனா கோரிக்கை

மேலும், “மத்திய அரசுக்கு இந்திய மக்களின் மீது அக்கறை கிடையாது. வரிச்சுமையை கூட்டிக் கொண்டே செல்கின்றனர். காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்போதே சிறிய விலை உயர்வுக்குக் கூட ‘மாட்டு வண்டியில் போகிறோம்’ என்று ஷோ காட்டினர். பல போராட்டங்களை நடத்தினர். தற்போது பெட்ரோல் ரூ.100-ஐ எட்டிவிட்டது.” என்று நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்