Aran Sei

ஜக்கி வாசுதேவின் கோவில்களை மீட்போம் பிரச்சாரம் – சமூகநீதிக்கு எதிரானது என கார்த்தி சிதம்பரம் விமர்சனம்

ஷா யோகா மையத்தின் ஜக்கி வாசுதேவ், கோவில்களை மீட்போம் எனும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவது சமூகநீதிக்கு எதிரானது என நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

இந்தியா டுடே தொலைக்காட்சியில் ஜக்கி கலந்துகொண்ட நிகழ்ச்சி தொடர்பாக அத்தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் பதிவிட்ட ட்விட்டர் பதிவைப் பகிர்ந்துள்ள கார்த்தி சிதம்பரம், இவ்வாறு தெரிவித்துள்ளார்.

”கோவில்களை மீட்டு யாரிடம் கொடுப்பது? சுயமாக நியமித்துக்கொண்ட கடவுகளிடமா?. அரசாங்கத்தின் எந்தவொரு தொடர்பு இல்லாத ஆட்களிடம் கோவில்களின் நிர்வாகத்தைக் கொடுத்தால், அனைத்து விளிம்புநிலை சமூகங்களையும் ஒதுக்கி வைத்து, சமூக நீதி இயக்கத்தால் ஒழிக்கப்பட்ட மேலாதிக்க சக்திகளை மீண்டும் கொண்டு வரும்” என கார்த்திக் சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்