Aran Sei

கர்நாடகா: உங்கள் மகனை தீவிரவாதியின் பெயரை கூறி அழைப்பீர்களா? – பேராசிரியருக்கு பாடம் எடுத்த மாணவன்

குப்பறையில் உள்ள ஒரு இஸ்லாமிய மாணவனின் பெயரை மும்பை குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்திய தீவிரவாதியின் பெயரான ‘கசாப்’ என்று மத வெறுப்புணர்வுடன் பேராசிரியர் ஒருவர் கூறும் காணொளி வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலம் உடுப்பியில் மனிப்பல் தொழில்நுட்ப கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் கடந்த வெள்ளிக்கிழமை வகுப்பு நடந்தபோது இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவன் ஒருவரிடம் பேராசிரியர் பெயர் என்ன என்று கேட்டுள்ளார். தனது பெயரை அந்த மாணவன் கூற ‘நீங்கள் கசாப் போன்றவன்’ என்றார். மாணவனின் பெயரை தவறாக கூறி பாகிஸ்தான் பயங்கரவாதியான கசாப்பின் பெயரை பேராசிரியர் கூறினார்.

மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவை வழிபடும் பாஜகவுக்கு இஸ்லாமியர்கள் ஒருபோதும் வாக்களிக்கமாட்டார்கள் – சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ. இக்பால் முகமது

தனது பெயரை மாற்றி பயங்கரவாதியின் பெயரான கசாப் என்று மாற்றிக் கூறியதால் ஆத்திரமடைந்த மாணவன் பேராசிரியருக்கு சரியான முறையில் பாடம் நடத்தினார். இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த காணொளியில்,

மாணவன்: இல்லை… இதுபோன்ற நகைச்சுவை ஏற்றுக்கொள்ளமுடியாது. எனது மதம் குறித்து மிகவும் கீழ்த்தரமாக நீங்கள் பேசக்கூடாது.

பேராசிரியர்: இல்லை இல்லை நீ என் மகன் போன்றவன்

மாணவன்: இல்லை. என் தந்தை இவ்வாறு கூறினால் அவர் எனக்கு தந்தையே இல்லை

பேராசிரியர்: இது நகைச்சுவையான பேச்சு (கசாப் என்று கூறியது)

மாணவன்: இல்லை, இது நகைச்சுவை அல்ல. 26/11 (மும்பை தாக்குதல்) நகைச்சுவை அல்ல. இந்நாட்டில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவனாக வாழ்வது, இது போன்ற நிகழ்வுகளை தினமும் சந்திப்பது நகைச்சுவையல்ல.

பேராசிரியர்: நீ என் மகன் போன்றவன்

மாணவன்: இல்லை… இல்லை… உங்கள் மகனிடம் இவ்வாறு பேசுவீர்களா? பயங்கரவாதியின் பெயரை கூறி உங்கள் மகனை நீங்கள் அழைப்பீர்களா?

பேராசிரியர்: இல்லை.

மாணவன்: வகுப்பறையில் இத்தனை பேர் முன்னிலையில் நீங்கள் என்னை எப்படி அவ்வாறு அழைக்கலாம்?

பேராசிரியர்: மன்னித்துவிடு என்று கூறிவிட்டேன்.

மாணவன்: நீங்கள் பேராசிரியர்… நீங்கள் கற்பிக்க வேண்டும்

பேராசிரியர்: மன்னித்துவிடு என்று கூறிவிட்டேன்

மாணவன்: நீங்கள் என்னை அவ்வாறு அழைத்திருக்கக்கூடாது

பேராசிரியர்: மன்னித்துவிடு

மாணவன்: மன்னித்துவிடு என்று நீங்கள் கூறுவதால் எவ்வாறு நீங்கள் சிந்திக்கிறீர்கள்… உங்களை இங்கு எவ்வாறு வெளிப்படுத்திக்கொள்கிறீர்கள் என்பது மாறாது’ என்றார்.

“இஸ்லாமியர்கள் லட்சுமி தேவியை வணங்குவதில்லை, ஆனால் அவர்கள் பணக்காரர்களாக இல்லையா?” – பாஜக எம்எல்ஏ பேச்சு

45 விநாடிகள் எடுக்கப்பட்ட இந்த காணொளி சமூகவலைத்தளத்தில் வைரலான நிலையில் மாணவனை பயங்கரவாதி கசாப்பின் பெயரை கூறி அழைத்த பேராசிரியரை இடைநீக்கம் செய்த கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்தவும் கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

மும்பையில் கடந்த 2008 நவம்பர் 26-ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதல், துப்பாக்கிச்சூட்டில் 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாத தாக்குதலை பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பு நடத்தியது.

மும்பை தாக்குதல் நடத்திய 9 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி மட்டும் உயிருடன் கைது செய்யப்பட்டு பின்னர், கசாப் தூக்கிலிடப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source : NDTV

Hindi Theriyadhu Poda I History of Hindi Imposition detailed Explanation I Maruthaiyan Intervie

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்