Aran Sei

‘அல்லாஹ் எல்லா நாட்டிலும் ஒற்றுமையை வழங்குவார்’ – பாகிஸ்தான் குடியரசு தினத்திற்கு வாழ்த்து சொன்னதற்காக பெண் கைது

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பாகிஸ்தான் குடியரசு தினத்திற்கு வாழ்த்து தெரிவித்தற்காக கர்நாடகாவில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (மார்ச் 25), இது தொடர்பாக, பாகல்கோட் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவரை அம்மாநில காவல்துறை கைது செய்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட முதோல் நகரில் வசிக்கும் குத்மா ஷேக் என்ற பெண், அந்நகரில் உள்ள மதரஸாவில் படித்து வருகிறார். பாகிஸ்தான் குடியரசு தினத்தை கொண்டாடும் மார்ச் 23ஆம் தேதி இச்சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

கர்நாடகா: பள்ளிப் பாடத்தில் திப்பு சுல்த்தான் – சில பகுதிகளை நீக்க மறு ஆய்வுக் குழு பரிந்துரை

“பாகிஸ்தான் குடியரசு தினத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் குத்மா ஷேக் வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் ஒன்றை பகிர்ந்துள்ளார். குத்மா ஷேக்கின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸைப் பார்த்த அருண் பஜந்த்ரி என்ற நபர், குத்மா ஷேக்கின் செயலை ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், நடவடிக்கை எடுக்கப்பட்டது” என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

நன்றி: New indian express

காவல் துறை பகிர்ந்துள்ள புகைப்படத்தின்படி, குற்றம் சாட்டப்பட்டுள்ள குத்மா ஷேக்  வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் ‘அல்லாஹ் ஹர் முல்க் மீ இத்திஹாத்… அமான்… சுகூன்… அதா ஃபர்மா மௌலா’ (அல்லாஹ் ஒவ்வொரு நாட்டிலும் ஒற்றுமை, அமைதி மற்றும் நல்லிணக்கத்தை வழங்குவாராக) என்று குறிப்பிட்டுள்ளார். இதனுடன், பாகிஸ்தானின் குடியரசு தினத்திற்கு வாழ்த்துகள் தெரிவிக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

கர்நாடகா: இந்துத்துவாவினரின் நெருக்கடியால் திருவிழாவில் கடைகள் போட இஸ்லாமியர்களுக்கு அனுமதி மறுப்பு

இது குறித்து முதோல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 153(ஏ) (மதம், இனம், பிறந்த இடம், வசிக்கும் இடம் ஆகியவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்), 505(2) (இரு வகுப்பினருக்கிடைடே பகை, வெறுப்பு அல்லது தீமையை உருவாக்கும் அல்லது ஊக்குவிக்கும் வகையிலான கருத்துகளை வெளியிடுதல்) ஆகியவற்றின் கீழ் குத்மா ஷேக்  மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Source: New Indian Express

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்