Aran Sei

ஷிவமொக்காவைத் தொடர்ந்து சாகர் நகர் – திருவிழாவில் இஸ்லாமியர்கள் கடை போட எதிர்ப்பு தெரிவித்த விஸ்வ ஹிந்து பரிஷத்

ர்நாடக மாநிலம் ஷிவமொக்கா மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ கோட்டே மாரிகாம்பா ஜாத்ரா திருவிழாவின்போது இஸ்லாமியர்கள் கடைகள் அமைக்க அனுமதிக்கப்படாததை அடுத்து, அம்மாவட்டத்தில் உள்ள சாகர் நகரில் மகா கணபதி ஜாத்ரா திருவிழாவுக்கும் இதேபோன்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஏப்ரல் 5ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை கணபதி கெரே கரையில் இந்த திருவிழா நடைபெற உள்ளது.

சாகர் தாலுக்காவில் மிகவும் முக்கியமான திருவிழாவான மகா கணபதி ஜாத்ரா திருவிழாவின்போது இஸ்லாமியர்களுக்கு கடை போட அனுமதியளிக்கக் கூடாது என்று சாகரில் உள்ள காவல்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் மனு அளித்துள்ளது.

கர்நாடகா: இந்துத்துவாவினரின் நெருக்கடியால் திருவிழாவில் கடைகள் போட இஸ்லாமியர்களுக்கு அனுமதி மறுப்பு

“ஷிவமொக்கா நகரில் ஸ்ரீ கோட்டே மாரிகாம்பா ஜாத்ரா திருவிழாவின்போது இஸ்லாமியர்களுக்குச் சொந்தமான கடைகள் அனுமதிக்கப்படவில்லை. மகா கணபதி ஜாத்ரா திருவிழாவிலும் இது போன்ற நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்” என்று அந்த அமைப்பு கோரியுள்ளது.

அம்மனுவில், “கண்காட்சியின்போது பூக்கள், பழங்கள், பொம்மைகள் மற்றும் உணவுகளை விற்க அதிகாரிகள் கடைகளை ஏலம் விடுகின்றனர். ஆனால், இக்கோயில் முசராய் துறையின் (கர்நாடக அரசின் இந்து கோவில்களுக்கான துறை) கீழ் உள்ளது. அரசு விதித்துள்ள விதிகளின்படி, கோயில் வளாகத்தில் இந்துக்கள் அல்லாதவர்கள் கடைகளைத் திறக்க அனுமதிக்க முடியாது” என்று விஸ்வ ஹிந்து பரிஷத் கூறியுள்ளது.

கர்நாடகா: இந்து அல்லாதவர் கோயில் இடங்களில் கடை வைக்க தடை விதித்ததே காங்கிரஸ்தான் – காங்கிரஸ் எம்எல்ஏவின் கேள்விக்கு பாஜக அமைச்சர் பதில்

“ஷிவமொக்கா, தட்சிண கன்னடா மற்றும் சிர்சியில் உள்ள பல ஜாத்ரா திருவிழா கமிட்டிகள் இந்துக்கள் அல்லாதவர்களை கோயில்களைச் சுற்றி கடைகளை போட அனுமதிக்கவில்லை” என்று விஸ்வ ஹிந்து பரிஷத் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், சாகர் நகர நகராட்சியானது இந்த திருவிழாவில் பொழுதுபோக்கு பூங்கா அமைப்பதற்கான ஏலத்தை ஒத்திவைத்துள்ளது.

Source: New Indian Express

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்