Aran Sei

கர்நாடகா: இஸ்லாமிய வியாபாரிகள் மீது வலதுசாரிகளின் வகுப்புவாத தாக்குதல் – தெருவோர வியாபாரிகள் சங்கம் கண்டனம்

ர்நாடக மாநிலம் ஷிவமொக்கா மாவட்டத்தில் உள்ள சாகர் நகரில் மகா கணபதி ஜாத்ரா திருவிழாவில் விஸ்வ ஹிந்து பரிஷத்த்தின் நெருக்கடியால் இஸ்லாமியர்கள் கடைகள் அமைக்க அனுமதிக்கப்படாததைப் பெங்களூரு தெருவோர வியாபாரிகள் சங்கம் கண்டித்துள்ளது.

ஷிவமொக்காவைத் தொடர்ந்து சாகர் நகர் – திருவிழாவில் இஸ்லாமியர்கள் கடை போட எதிர்ப்பு தெரிவித்த விஸ்வ ஹிந்து பரிஷத்

கர்நாடகாவில் தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தில் தீவிர வகுப்புவாத ரீதியாகத் தொடுக்கப்படும் தாக்குதலை பெங்களூரு பிரகதிபரா பீதி வியாபாரிகலா சங்கம் மற்றும் பிற கூட்டணி அமைப்புகள் கண்டித்துள்ளன.

“ஷிவமொக்கா நகரில் ஸ்ரீ கோட்டே மாரிகாம்பா ஜாத்ரா திருவிழாவின்போது இஸ்லாமியர்களுக்குச் சொந்தமான கடைகள் அனுமதிக்கப்படவில்லை. மகா கணபதி ஜாத்ரா திருவிழாவிலும் இது போன்ற நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்” என்று சாகரில் உள்ள காவல்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் மனு அளித்துள்ளது.

ஏப்ரல் 5ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை கணபதி கெரே கரையில் இந்த திருவிழா நடைபெற உள்ளது.

கர்நாடகா: இந்துத்துவாவினரின் நெருக்கடியால் திருவிழாவில் கடைகள் போட இஸ்லாமியர்களுக்கு அனுமதி மறுப்பு

“தெருவோர வியாபாரிகள் அனுதினமும் அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரால் துன்புறுத்தப்படுகின்றனர். தற்போது வகுப்புவாத முறையில் தெருவோர வியாபாரிகளின் மேல் தாக்குதல் தீவிரமடைந்துள்ளதாக” பெங்களூரு தெருவோர வியாபாரிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

மங்களூருவில் உள்ள உப்பினங்கடியில் ஒரு இஸ்லாமிய ஐஸ்கிரீம் விற்பனையாளர் ஆண்டுதோறும் நடக்கும் கோயில் திருவிழாவில் வலதுசாரியினரால் தாக்கப்பட்டுள்ளார். மேலும் அண்மையில், பெங்களூரு விஜய நகரில் உள்ள இஸ்லாமியர்களின் கடைகளில் இந்து மதக் கொடிகள் ஏற்றப்பட்டன. ஆனால், கடைகளின் விற்பனையாளர்கள் ஒற்றுமையாக இருந்ததால் அந்த கொடிகள் அகற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Source : newindianexpress

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்