Aran Sei

கர்நாடகா: இஸ்லாமிய மாம்பழ வியாபாரிகளைக் குறிவைக்கும் இந்துத்துவ வலதுசாரி அமைப்பினர்

மாம்பழ சந்தைகள் இஸ்லாமிய வியாபாரிகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன. எனவே இதனை ஏழை இந்து மாம்பழ உற்பத்தியாளர்களும், வியாபாரிகளும் கவனத்தில் கொண்டு தங்களது தொழில் பாதுகாப்பை காப்பாற்ற வேண்டும் என்று வலதுசாரி அமைப்பான ஸ்ரீராம சேனையின் கௌரவத் தலைவரான சித்தலிங்க சுவாமி தெரிவித்துள்ளார்.

கர்நாடகா: பாங் ஒலிக்கு எதிராக பரப்புரை செய்யும் இந்துத்துவாவினர் – மசூதிக்கு வெளியே உள்ள ஒலிப்பெருக்கிகளை அகற்ற வலியுறுத்தல்

இஸ்லாமியர்களை மாம்பழ வியாபாரம் செய்ய வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை. இந்துக்களும் மாம்பழ வியாபாரம் செய்யவேண்டும் ஆகவே மாம்பழங்களின் விலைகளை இஸ்லாமிய வியாபாரிகள் நிர்ணயிக்க முடியாது என்றே நாங்கள் கூறுகிறோம் என்று சித்தலிங்க சுவாமி கூறியுள்ளார்.

ஸ்ரீராம சேனையின் இத்தகைய அறிவிப்புகளுக்கு மாம்பழ வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த வியாபாரிகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

பள்ளி மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்களும் ஹிஜாப் அணியக் கூடாது – கர்நாடக கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ்

“இஸ்லாமிய வர்த்தகர்கள் பல வருடங்களாக விவசாயிகளுக்குச் சந்தை வசதிகளைச் செய்து கொடுத்து வருகின்றனர். ஆகவே இஸ்லாமிய வியாபாரிகள் மீதான இத்தகைய பிரச்சாரத்திற்குப் பதிலாக மாம்பழ விவசாயிகளுக்கு லாபகரமான விலையை வழங்குவதற்கு ஸ்ரீராம சேனை முயற்சி செய்யலாம்” என்று கோலார் மாவட்ட மாம்பழ உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் நீலத்தூர் சின்னப்ப ரெட்டி தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய வியாபாரிகளிடமிருந்து மாம்பழங்களை வாங்க வேண்டாம் என்ற இந்துத்துவ அமைப்புகள் கோரிக்கை வைப்பது தேசத் துரோகம் என்று கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சரான எச்.டி.குமாரசாமி தெரிவித்துள்ளார். “பல நூற்றாண்டுகளாக நமக்கான உணவுகளை இஸ்லாமியர்கள் விற்று வருகின்றனர். அப்படியிருக்கத் தேர்தல் சமயத்தில் மட்டும் இத்தகைய பிரச்சினைகள் ஏன் எழுகின்றன?”  என்று குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

கர்நாடகாவில் ஹலால் இறைச்சி விற்ற இஸ்லாமிய வியாபாரியை தாக்கிய வழக்கு: பஜ்ரங் தள் உறுப்பினர்கள் 5 பேர் கைது

கர்நாடகாவில் ஹிஜாப் தடை, கோயில் திருவிழாக்களில் இஸ்லாமிய வியாபாரிகள் கடை போடுவதற்கான தடை, ஹலால் இறைச்சி பிரச்சினைகளைத் தொடர்ந்து இஸ்லாமிய மாம்பழ வியாபாரிகள் பற்றிய பிரச்சினையை வலதுசாரி அமைப்பான ஸ்ரீராம சேனை கிளப்பியுள்ளது. ஏற்கனவே மசூதிகளுக்கு வெளியே இருக்கும் ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவதற்கு தடை செய்ய கர்நாடக அரசு ஆலோசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்