Aran Sei

காங்கிரஸ் எதிர்ப்பையும் மீறி நிறைவேறியது பசுவதை தடுப்புச் சட்டம்

சுவதை தடுப்பு மசோதாவை கர்நாடகா சட்டசபை நிறைவேற்றியிருக்கிறது என தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

பசுவதை தடுப்பு மற்றும் கால்நடை பாதுகாப்பு மசோதா 2020-ஐ கர்நாடகாவின் சட்டசபை நிறைவேற்றியிருக்கிறது. இச்சட்டத்தின் கீழ் பசுவதையில் ஈடுபடுபவர்களுக்கு 3 முதல் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஐம்பதாயிரம் முதம் ஏழு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

`கோமாதா நம்முடைய மாதா’ – கர்நாடகாவில் அமலாகப்போகும் பசுவதை தடுப்புச் சட்டம்

 

சட்டசபையில் இப்போது நடந்து கொண்டிருக்கும் கூட்டத்தொடரின் கால அளவு வெகுவாக குறைக்கப்பட்டிருப்பதால் புதிய மசோதாக்கள் நிறைவேற்ற கூடாது என, தொழில் ஆலோசனை குழு அறிவுறுத்தியதற்கு எதிராக பசுவதை மசோதா சட்டசபைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது என எதிர்கட்சிகளான காங்கிரஸும், மதச்சார்பற்ற ஜனதா தளமும், மசோதா நிறைவேற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.

தேசிய விலங்காகப் `பசு’ வை அறிவிக்கக் கோரி ‘பாத யாத்திரை’

 

மதச்சார்பற்ற ஜனதா தளகட்சி வெளிநடப்பு செய்த நிலையில், கூட்டத்தொடரை புறக்கணிப்போம் என சித்தாரமையா தலைமையிலான எதிர்கட்சிகள் தெரிவித்தன. எதிர்ப்பு, கூச்சலுக்கு மத்தியில், கால்நடைத்துறை அமைச்சர் பிரபு சவுஹான் தாக்கல் செய்த இந்த மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

பாஜக ஆளும் மாநிலங்களின் பசு நல வரிகள் – மனித நலனின் நிலை என்ன?

 

2017 ஆம் ஆண்டு மே மாதம், மாட்டிறைச்சி விற்பதற்கு தேசிய அளவில் தடை விதித்த்து மத்திய அரசு. மாட்டிறைச்சி உட்கொள்பவர்கள் அதிகம் இந்தியாவில் இருப்பதனால், மத்திய அரசின் இந்த தடைக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. இன்று, இந்தியாவில் பதினொன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் மாட்டிறைச்சிக்கு தடை இல்லாத போதிலும், பல மாநிலங்களில் பசு,காளை,எருது,கன்று ஆகியவற்றின் இறைச்சியை விற்க/உண்ண தடை இருக்கிறது.இந்தியாவின் பல மாநிலங்களில், குறிப்பாக வட மாநிலங்களில், பசு வதைக்கு எதிரான சட்டங்களும், பசுக்காவல் அமைப்புகளும் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

(தி ஹிந்து இணையதளத்தில் வெளியான செய்தியின் மொழியாக்கம்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்