Aran Sei

‘நம்ம ஆர்எஸ்எஸ்’ என கூறிய கர்நாடக சபாநாயகர்: சபாநாயகர் பதவியை அவமதித்துவிட்டதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு

ர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் விஸ்வேஷ்வர் ஹெக்டே காகேரி ‘நம்ம ஆர்எஸ்எஸ்’ என சபையில் கூறியதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, “விஸ்வேஷ்வர் சபாநாயகர் பதவியையே அவமதித்துவிட்டார்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

சபாநாயகருக்கு ஆதரவாக பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பல்வேறு கட்சிகளில் உள்ள அரசியல் தலைவர்களுடனான தனது தனிப்பட்ட உறவைப் பற்றி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா பேசுகையில், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தைப் (ஆர்எஸ்எஸ்) பற்றி குறிப்பிட்டபோது குறுக்கிட்ட விஸ்வேஷ்வர், “நீங்கள் ஏன் நம்ம ஆர்எஸ்எஸ்ஸின் பின்னால் இருக்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்துக்கள் ஒன்றிணைந்தால் காவிக் கொடி தேசியக் கொடியாக மாறும் – ஆர்எஸ்எஸ் மூத்த தலைவரின் சர்ச்சை பேச்சு

இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் உறுப்பினர்கள், விஸ்வேஷ்வரின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் என்ற பெயரை சித்தராமையா தவறாக உச்சரித்தபோது, மீண்டும் குறுக்கிட்ட விஸ்வேஷ்வர், ​​ அவரைத் திருத்தியுள்ளார்.

சமீர் அகமது உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள், “சபாநாயகர் நாற்காலியில் அமர்ந்திருப்பவர் எப்படி ‘நம்ம ஆர்எஸ்எஸ்’ என்று கூற முடியும்” என்று கேள்வி எழுப்பியதற்கு, “சமீர் அகமதுவும்கூட ‘நம்ம ஆர்எஸ்எஸ்’ என சொல்லும் நாள் வரும் என்று சபாநாயகர் விஸ்வேஷ்வர் பதிலளித்துள்ளார்.

‘சுதந்திரப் போராட்டத்தில் ஆர்எஸ்எஸ்ஸுக்கு எந்த பங்கும் இல்லை’- ராஜஸ்தான் முதலமைச்சர்

“நாட்டின் மூலை முடுக்கெல்லாம் ஆர்எஸ்எஸ் சென்றுள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல முதலமைச்சர்கள் ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்டவர்கள்தான். இதை ஏற்றுக்கொள்ளதான் வேண்டும்” என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர் அசோக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் உள்ள இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் அனைவரும் ஆர்எஸ்எஸ் அமைப்பை ஏற்றுக்கொள்வார்கள் என்று அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளார்.

Source: New Indian Express

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்