Aran Sei

அமைச்சர் மீது பாலியல் குற்றச்சாட்டு: செய்தி வெளியிடுவதற்கு முன் ஆதாரங்களை சரி பாருங்கள்- ஊடகங்களை கண்டித்த பெங்களூரு நீதிமன்றம்

ர்நாடக அமைச்சர்கள் 6 பேர்மீதான பாலியல் புகார் தொடர்பான அவதூறு செய்திகளை வெளியிட 68 ஊடகங்களுக்குத் தடை விதித்து பெங்களூரூ நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக, தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

வழக்கின் அடுத்த விசாரணை வரும் வரை, அமைச்சர்கள்மீதான புகார் தொடர்பாக எந்தச் செய்தியும் வெளியிடக் கூடாது எனக் குறிப்பிடப்பட்டிருப்பதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் புகாரில் குற்றம்சாட்டப்பட்டதை அடுத்து கர்நாடக அமைச்சர் ரமேஷ் ஜகிர்ஹோலி பதவி விலகினார். அதைத்தொடர்ந்து, அம்மாநிலத்தை சேர்ந்த அமைச்சர்கள் சிவராம் ஹீபர், பி.சி.பாட்டீல், எச்.டி. சோமசுந்தரம், கே.சுதாகர், நாராயணன் கவுடா, பைரதி பசவராஜ் ஆகியோர் தொடர்ந்த வழக்கில், இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக தி வயர் கூறியுள்ளது.

நக்சலைட் இயக்கங்கள் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – திரிணாமூல் காங்கிரஸ் – பாஜக : நடிகர் மிதுன் சக்ரவர்த்தியின் அரசியல் பயணம்

இந்தியன் எக்ஸ்பிரஸ் தகவலின் படி கர்நாடக அமைச்சர்களின் பாலியல் புகார் தொடர்பாக 19 காணொளிகள் இருப்பதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 அமைச்சர்கள் இணைந்து தாக்கல் செய்துள்ள மனுவில், ”இது போன்ற செய்திகளை வெளியிடுவதால் எங்கள் குடும்பத்திற்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்துவதோடு, தொகுதி மக்கள் அமைச்சர்கள் ஊழலில் ஈடுபட்டதாக கருதுகின்றனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக, தி வயர் கூறியுள்ளது.

வழக்கை விசாரித்த 26 வது சிவில் மற்றும் அமர்வு நீதிமன்றம் நீதிபதி டி.எஸ். விஜய குமார், “செய்தி வெளியிடுவதற்கு முன் அதன் அடிப்படை ஆதாரங்களைச் சரிபார்க்க ஊடகங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என நான் கருதுகிறேன். இது போன்ற செய்திகளுக்குப் பொறுப்பேற்க தயாராக இருக்க வேண்டும். கருத்து சுதந்திரம் மற்றும் குடிமக்களின் உரிமை முன்னேற்றத்திற்காக, இது போன்ற செய்திகள் ஒளிபரப்ப வேண்டாம்” என்று அவர் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

‘பாஜகவுக்கு சுங்கத்துறையும் அமலாக்க துறையும் தேர்தல் பிரச்சாரம் செய்கின்றன’ – பினராயி விஜயன் குற்றச்சாட்டு

”மனுதாரர்களுக்கு எதிராக சரிசெய்யப்படாத செய்திகளை ஒளிபரப்ப அல்லது வெளியிடுவதை தடை செய்ய வேண்டும்”  என்று நீதிபதி கூறியதாக, தி வயர்  தெரிவித்துள்ளது.

”ஊடகங்கங்கள் ஜனநாயகத்தின் நாண்காவது தூண். ஆனால், அவை சரிபார்க்கப்படாத செய்திகள்மூலம் அவதூறுகள் பரப்புவதை ஏற்க முடியாது” என நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக, தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்