Aran Sei

பாலியல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பாஜக அமைச்சர் – அரசியல் சதி என்று காவல்துறையிடம் புகார்

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த கர்நாடகா பாஜக சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் ஜர்கிஹோலி அளித்த புகாரின் பெயரில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மீது கொலை சதி மற்றும் அச்சுறுத்தல் பிரிவுகளில் பெங்களூரு காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர்.

அரசு வேலை வாங்கித் தருவதாக ரமேஷ் ஜர்கிஹோலி ஒரு பெண்ணிடம் வாக்குறுதி  அளித்து அவரைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.  அப்பெண்ணுடன் இருக்கும்  காட்சிகள் வெளியானதைத் தொடர்ந்து, அவர் பதவி விலக நேரிட்டது.

இது தொடர்பாக, சமூக செயல்பாட்டாளரான தினேஷ் கல்லஹல்லி பெங்களூரு காவல்நிலையத்தில் ரமேஷ் ஜர்கிஹோலி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகாரளித்தார்.

கர்நாடகா பாஜக அமைச்சர் பாலியல் முறைகேடு – புகாரை திரும்பப் பெறுவதாக குற்றம் சாட்டியவர் மனு

பின்னர், தனது வழக்கறிஞர் மூலமாக புகாரைத் திரும்பப் பெறும் மனுவைத் தாக்கல் செய்த அவர், பாதிக்கப்பட்ட பெண் சமூக ஊடகங்களில் ஒரு குற்றவாளியாக பார்க்கப்படுவதாலும், முன்னாள் முதல்வர் எச்.டி குமாரசுவாமி இந்தக் குறுந்தகடு விவகாரத்தில் ரூ 5 கோடிக்கான திட்டம் உள்ளது என்று கூறியது தன்னை புண்படுத்தியதாலும் புகாரைத் திரும்பப் பெறுவதாக  கூறியிருந்தார்.

இந்நிலையில், நேற்று (மார்ச் 13) தனது நண்பர் எம் வி நாகராஜை வழியாக சதாசிவநகர் காவல் நிலையத்தில் தனது புகாரை ரமேஷ் ஜர்கிஹோலி அளித்துள்ளார்.

இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் குற்றவியல் சதி, மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் மோசடி செய்ததாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பெண்கள் மீதான பாலியல் சுரண்டல்: வெளிவராத உண்மைகள்

இப்புகாரில் ரமேஷ் ஜர்கிஹோலி யாரையும் குற்றவாளியெனக் குறிப்பிடவில்லை என்றாலும், பணம் பறிக்கும் நோக்கத்துடன் சிலர் தன்னைப் பற்றிய அவதூறு பரப்புவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

கடந்த மூன்று மாதங்களாக தனக்கு எதிராக சதி நடந்து வருவதாகவும், அரசியல் ரீதியாக தன்னை அழிக்கும் நோக்கில் ஒரு பொய்யான காணொளி அடங்கிய குறுந்தகடு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறும் ரமேஷ் ஜர்கிஹோலி, “இந்தச் சதி திட்டத்தில் பலர் ஈடுபட்டுள்ளனர். பொய்யான காணொளியைத் தயாரித்து இணையத்தில் வெளியிடுவது என்பது அரசியல் நிலையற்ற தன்மையை உருவாக்கும் திட்டத்தின் ஒரு பகுதி.” என்று தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய ரமேஷ்  ஜர்கிஹோலி, இந்த வழக்கில் தான்  சட்டரீதியாக போராட முடிவு செய்துள்ளதாகக் கூறியுள்ளார்.

பாலியல் வழக்கில் ராஜினாமா செய்த கர்நாடக அமைச்சர் – புகாரளித்தவர் மிரட்டப்படுவதாக குற்றச்சாட்டு

புகாரில் யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் இருப்பது குறித்த கேள்விக்கு, “சட்ட வல்லுநர்களின் அறிவுறுத்தலின் படியே தான் புகார் அளித்துள்ளேன். இதற்குப் பின்னால் ஒரு கிரிமினல் சதி இருக்கிறது. இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் வெளிக்கொணர்வேன்.” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், நேற்று (மார்ச் 13), இவர் மீதான பாலியல் வன்கொடுமை புகார் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு, இவ்வழக்கு தொடர்பாக பெங்களூரு விஜயபுராவைச் சேர்ந்த ஒருவர் உட்பட 6 பேரை விசாரித்து வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்