கர்நாடகா மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் கோவிலுக்குள் நுழைந்து இந்துக் கடவுள் சிலையை தொட்டதால் ரூ.60,000 அபராதம் விதிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தலித் அமைப்புகள் போராட்டம் நடத்தியுள்ளது.
முன்னதாக, மாலூர் தாலுகாவில் உள்ள ஹுல்லேரஹள்ளி கிராமத்தில் ஒரு கோயில் கட்டப்பட்டதாகவும், அதைக் கொண்டாட கிராம மக்கள் முடிவு செய்ததாகவும் ஊர்வலத்திற்கு எடுத்துச் செல்ல தயாராக இருந்த சிலையைப் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சிறுவன் தொட்டுவிட்டதாகவும் உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
கோயில் விழா கொண்டாட்டத்தின் போது, சிலையைத் தொட்டு, அதைத் தலையில் சுமக்க முயன்றார் சேத்தன். இந்த நிலையில், அவரை அப்புறப்படுத்திய ஆதிக்கச் சாதியினர், அவரது குடும்பத்தினருக்கு ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
பட்டியல் சமூக சிறுவனின் பெற்றோர்கள் அபராதத் தொகையை செலுத்தும் வரை கிராமத்திற்குள் செல்ல வேண்டாம் என்று கிராம தலைவர்கள் கேட்டுக் கொண்டனர்.
இதன் பிறகு சேத்தனின் குடும்பத்தினர் தங்கள் வீட்டில் உள்ள இந்து தெய்வங்களின் படங்களுக்கு பதிலாக டாக்டர் பீம் ராவ் அம்பேத்கரின் புகைப்படங்களை வைக்க முடிவு செய்தனர்.
“கடவுள் நம்மை விரும்பவில்லை என்றால், நாங்கள் அவரிடம் ஜெபிக்க மாட்டோம். இனிமேல் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரை மட்டுமே வணங்குவோம்” என்று சிறுவனின் தாய் ஷோபம்மா கூறியிருந்தார்.
ஒடிசா: தலித் மருத்துவர் பிரேத பரிசோதனை செய்ததால் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு
தீண்டாமையின் காரணமாக நடைபெற்ற இச்செயலுக்கு தலித் அமைப்புகள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
Vck Thirumavalavan rebuttals H Raja comment against him | Gandhi Jayanthi | RSS procession
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.