Aran Sei

‘திருநங்கைகளுக்கு அரசு வேலைகளில் 1% இட ஒதுக்கீடு’: சட்ட வரைவை முன்மொழிந்த கர்நாடக அரசு

திருநங்கைகளுக்கு அனைத்து அரசாங்க வேலைவாய்ப்புகளிலும் 1 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கர்நாடக அரசு சட்ட வரைவை முன்மொழிந்துள்ளது.

பொது பிரிவு, அட்டவணை சமூகம், பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவு என ஒவ்வொரு பிரிவிலும் 1 சதவீதம் இடஒதுக்கீடு திருநங்கைகளுக்கு வழங்கப்படும் என இந்தாண்டு மே 13 ஆம் தேதி கர்நாடக அரசு சட்ட வரைவு வெளியிடப்பட்டது.

திருநங்கைகளுக்கான இடஒதுக்கீட்டை செயல்படுத்த கர்நாடக சிவில் சர்வீசஸ் (பொது பிரிவு ஆட்சேர்ப்பு) விதிகள், 1977-ன் 9 ஆம் விதி திருத்தப்பட்டது.

திருநங்கையரையும் அர்ச்சகராக நியமிக்க வேண்டும்- தமிழ்நாடு அரசுக்கு விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் வேண்டுகோள்.

நேற்று (ஜூன் 18), இந்த சட்ட வரைவானது, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அபய் ஸ்ரீனிவாஸ் ஓகா மற்றும் நீதிபதி சூரஜ் கோவிந்தராஜ் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன், திருநங்கைகள் நல உரிமை செயற்பாட்டுக்கான அமைப்பான ’சங்கமா’ தொடுத்த பொது நல வழக்கின் விசாரணையின் போது அம்மாநில அரசால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து அரசு தரப்பில், “நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள திருநங்கைகளுக்கு 1 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான வரைவு மீது கருத்து தெரிவிக்க பொதுமக்களுக்கு 15 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது. ஆனால், அவர்களிடம் இருந்து இதுவரை எந்தவொரு ஆட்சேபனையோ பரிந்துரைகளோ வரவில்லை.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

source; thehindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்