எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி மத சுதந்திரத்திற்கான பாதுகாப்பு மசோதா 2021 கர்நாடகா சட்டப்பேரவையில் நிறைவேறியது.
இச்சட்டம் மக்கள் விரோதமானது, மனிதாபிமானமற்றது, அரசியலமைப்புக்கு எதிரானது, ஏழைகளுக்கு எதிஎரானது மற்றும் கொடுமையானது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இந்தச் சட்டத்தை எந்த காரணத்திற்காகவும் நிறைவேற்றப்படக்கூடாது என்றும் அரசாங்கத்தால் திரும்பப் பெறப்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியது.
இம்மசோதா காங்கிரஸ் தலைமையிலான அரசால் கொண்டுவரப்பட்டது என்று பாஜக தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் சித்தராமையா அதை மறுத்தாலும், பின்னர் சபாநாயகர் அலுவலகத்தில் உள்ள பதிவேடுகளை நேரில் சென்று பார்த்தபோது, முதல்வராக இருந்தபோது, அமைச்சரவையில் வரைவு மசோதாவை மட்டுமே தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொண்டேன், எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்பதை ஏற்றுக்கொண்டார்.
இந்த மசோதாவின் பின்னணியில் ஆர்எஸ்எஸ்-ன் கை இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா கூறியுள்ளார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, ஆர்எஸ்எஸ் மதமாற்ற எதிர்ப்புக்கு உறுதி பூண்டுள்ளது, இது மறைவான ரகசியம் அல்ல, வெளிப்படையான ரகசியம். 2016-ம் ஆண்டு காங்கிரஸ் அரசு தனது ஆட்சிக் காலத்தில் மசோதாவைத் துவக்கியது ஏன்? ஆர்எஸ்எஸ் கொள்கையை பின்பற்றுகிறதா? ஹிமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் முதல்வர் வீரபத்ர சிங் இதே மசோதாவைக் கொண்டு வந்த்து தங்களுக்குத் தெரியாதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.