Aran Sei

கர்நாடகா: போக்குவரத்து வசதி இல்லாததால் 8 கி.மீ தூரம் கர்ப்பிணியை தொட்டில் கட்டி சுமந்து சென்ற அவலம்

ர்நாடகாவில் போக்குவரத்து வசதி இல்லாததால், எட்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு, கர்ப்பிணியை தொட்டில் கட்டி தூக்கிச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கர்நாடகாவின் தொட்டனே கிராமத்தில், போக்குவரத்து வசதி இல்லாததால் வனத்துறை சார்பில் ஜீப்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. சாமராஜநகரில் உள்ள வனத்துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ‘ஜன வன சேது’ என்ற சிறப்பு முயற்சியை சில வாரங்களுக்கு முன் துவக்கி, கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு வாகனங்கள் வழங்க உறுதியளித்தனர்.

திருச்சி: பொது அமைதிக்கு குந்தக விளைவித்ததாக பாஜகவினர் 8 பேர் மீது வழக்கு

இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த சாந்தலா என்ற பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் ஜீப் ஓட்டுநர் மற்றும் அதிகாரிகளை பல முறை தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் யாரும் வராததால்,வேறு வழியின்றி தொட்டில் கட்டி நிறைமாத கர்ப்பிணியை எட்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு வனப்பகுதி வழியாக , மருத்துவமனைக்கு சுமந்து சென்றுள்ளனர்.

வன விலங்குகள், காட்டுப்பன்றிகள் மற்றும் சிறுத்தைகள் நிறைந்ததாகக் கருதப்படும் அடர்ந்த காடு வழியாக 8 கிலோமீட்டர் தூரம் வழியாக சாந்தலாவை ஒரு துணி மற்றும் மரக் கம்பிகளைக் கொண்டு விரைவாக ஒரு தொட்டில்  உருவாக்கியுள்ளனர்.

நுபுர் சர்மா குறித்த உச்சநீதிமன்ற கருத்துக்கள் – பாஜக வெட்கித் தலைகுணிய வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் கருத்து

கிராம மக்கள் நள்ளிரவு 1 மணிக்கு தங்கள் பயணத்தை தொடங்கி காலை 6 மணிக்கே சுகாதார நிலையத்தை அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக சாந்தலாவால் மருத்துவமனையில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க முடிந்தது

மாவட்ட சுகாதார அதிகாரி டாக்டர் கே. விஸ்வேஸ்வரய்யா கூறும்போது,   ஒரு வாரத்திற்கு முன்பே சாந்தலா அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும். “கிராம மக்களின் பயன்பாட்டிற்காக வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன, சிக்னல் கோளாறுகள் காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது. மாற்று தகவல் தொடர்பு முறைகளை அமைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

Source: timesnownews

எடப்பாடி பழனிச்சாமி உள்ளே போறது உறுதி | Nakkheeran Prakash | Kodanad

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்