Aran Sei

இஸ்லாமிய வியாபாரிகளை தடை செய்துள்ள கர்நாடக அரசு அடுத்து விப்ரோவை தடை செய்யுமா? – காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் கேள்வி

த திருவிழாக்களில் இஸ்லாமியர்கள் வர்த்தகம் செய்ய தடை விதித்திருக்கும் கர்நாடக அரசு விப்ரோ நிறுவனத்தைத் தடை செய்யுமா? என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் பிரியங்க் கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பிரியங்க் கார்கே, “இஸ்லாமிய நாடுகளுடன் இந்தியா வர்த்தகம் செய்யாது என்று சொல்ல முடியுமா?. கர்நாடக அரசின் செயல்களைப் பார்த்தால், பாதி முதலீடு திரும்பப் பெறப்படும். விப்ரோவை நடத்துபவர்கள் யார்? அங்கு லட்சக்கணக்கானோர் பணிபுரிகின்றனர். இது ஒரு தேசத்தைக் கட்டியெழுப்பும் நிறுவனமல்லவா?. அவர்கள் (விப்ரோவின் உரிமையாளர்கள்) பாகிஸ்தானிற்கு சென்றிருக்கலாம். ஆனால், அவர்கள் இங்கேயே தங்கியிருக்க முடிவு செய்தனர்.” என தெரிவித்துள்ளார்.

ஹிஜாப் அணிந்த பெண்ணிற்கு அனுமதி மறுத்த இந்திய உணவகம் – உணவகத்தை மூட உத்தரவிட்ட பஹ்ரைன் அதிகாரிகள்

இஸ்லாமிய வியாபாரிகள் தடைகுறித்து பேசிய அவர், “சவூதி அரேபியா, ஈராக், மலேசியா, கத்தார், குவைத், துருக்கி, பங்களாதேஷ், ஜோர்டான் ஆகிய நாடுகளுடன் பல நூறு கோடி அமெரிக்க டாலர்களுக்கு இந்தியா வர்த்தகம் செய்து வருகிறது. இந்த நாடுகளுடன் ஏற்றுமதி அல்லது இறக்குமதியில் ஈடுபட மாட்டோம் என்று நிலைப்பாட்டை பாஜக எடுக்கட்டும். வறுமைக்கு மதமோ ஜாதியோ தெரியுமா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

வேலைவாய்ப்பு உருவாக்கம் குறித்த புள்ளிவிவரங்களை குறிப்பிட்ட கார்கே, “பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புத் துறை என்று ஒன்று உள்ளது. அதிலேயே அதிக காலி இடங்கள் உள்ளன. அனுமதிக்கப்பட்ட 6,187 பணியிடங்களில் 3,643 காலியாக உள்ளன. இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் என்று அரசாங்கம் எப்படி நம்ப வைக்கும்? என அவர் கேட்டுள்ளார்.

காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்பட்டால்தான் அமைதி கிடைக்கும்; மக்களோடு பேசுங்கள் – ஒன்றிய அரசை வலியுறுத்திய மெகபூபா முப்தி

“2021-22 ஆம் ஆண்டில், அரசாங்கம் 54 வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தியது, அதில் 12,822 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கிராமப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ், 6,643 பேருக்கு 10 கண்காட்சிகள் நடத்தப்பட்டன. மொத்தம் 19,465 பேர், அவர்களில் 1,883 பேருக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளது” என்று கார்கே கூறியுள்ளார்.

Source: Deccan Herald

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்