Aran Sei

கர்நாடகா: இஸ்லாமிய வியாபாரிகளின் பழக் கடைகளைச் சேதப்படுத்திய வலதுசாரிகள் – காவல்துறை வழக்கு பதிவு

ர்நாடகாவில் உள்ள தார்வாட் மாவட்டத்தில் உள்ள நுக்கேகேரி அனுமன் கோயிலுக்கு அருகே இஸ்லாமிய வியாபாரிக்குச் சொந்தமான தர்பூசணி பழங்களை இந்துத்துவ வலதுசாரி அமைப்புகள் உடைத்து அழித்துள்ளன.

இஸ்லாமிய பழ வியாபாரிகளை புறக்கணிக்க கோரிய இந்துத்துவா தலைவர் – வழக்கு பதியாத பெங்களூரு காவல்துறை

இந்துத்துவ வலதுசாரி அமைப்பினர் இஸ்லாமிய வியாபாரிகளின் தள்ளுவண்டிகளில் இருந்த தர்பூசணி பழங்களைச் சேதப்படுத்தியதோடு 4 தள்ளுவண்டிகளையும் உடைத்துள்ளனர். பின்னர் இந்துத்துவ வலதுசாரி அமைப்பினருக்கும் இஸ்லாமிய வியாபாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பிறகு காவல்துறையினர் அங்கு வந்து நிலைமையைக் கட்டுப்படுத்தினர். பிறகு பழங்களைச் சேதப்படுத்திய வலதுசாரி உறுப்பினர்கள் மீது தார்வாட் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்

இந்து அல்லாத பிற மதத்தினர் கோயிலில் வியாபாரம் செய்ய அனுமதிக்கக் கூடாது என 15 நாட்களுக்கு முன்பே கோயில் நிர்வாகத்திடம் மனு கொடுத்தோம். ஆனால் இஸ்லாமிய வியாபாரிகள் எங்கள் கோரிக்கைகளைப் புறக்கணித்ததால் அவர்களுக்குப் பாடம் புகட்ட இவ்வாறு செய்தோம் என்று இந்துத்துவ வலதுசாரி அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

கர்நாடகா: இஸ்லாமிய மாம்பழ வியாபாரிகளைக் குறிவைக்கும் இந்துத்துவ வலதுசாரி அமைப்பினர்

“கோயில் அதிகாரிகள் யாரும் இந்த இடத்தை காலி செய்யுமாறு எங்களுக்கு அறிவுறுத்தவில்லை. கடைகளைச் சேதமடைந்ததால் எங்களுக்கு ஆயிரக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதற்கு யார் பொறுப்பு. ஒரு காவல்துறை அதிகாரியின் கண்முன்னே எங்களது கடைகளை அடித்து உடைத்தார்கள்” என்று நபிசாப் என்ற இஸ்லாமிய வியாபாரி தெரிவித்துள்ளார்.

Source : newindianexpress

நான் வரைந்த ஓவியத்தைத்தான் A.R.Rahman பகிர்ந்தார். ஓவியர் சந்தோஷ் நாராயணின் நேர்காணல்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்