Aran Sei

தண்டாவளம் அருகே இறந்த கிடந்த கர்நாடக மேலவை உறுப்பினர் : தற்கொலை என காவல்துறை தகவல்

credits : new indian express

கர்நாடக மாநிலத்தின் சட்ட மேலவை உறுப்பினரும், துணைத் தலைவருமான எஸ்.எல்.தர்மே கவுடா, சிக்மகலூர் மாவட்டத்தில் உள்ள குணசாகாரா மற்றும் கப்லி ரயில் தண்டாவளம் அருகே இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார் என டெக்கன் ஹெரால்ட் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த திங்கள்கிழமையன்று (29-12-20) சகாராயபாட்டனாவில் இருக்கும் தன்னுடைய பண்ணை வீட்டிலிருந்து தனியார் காரில் வெளியே சென்றுள்ளார். பண்ணை வீட்டிலிருந்து வெளியே சென்ற அவர், கார் ஒட்டுநரிடம் ஒருவரை சந்தித்து வருவதாக கூறி ரயில்வே தண்டவாளம் அருகே வண்டியை நிறுத்த சொல்லி, வண்டியை விட்டு வெளியே இறங்கியுள்ளார்.

மீண்டும் தலைத்தூக்கும் கந்துவட்டி கொடுமைகள் – மிரட்டலுக்குப் பயந்து தமிழாசிரியர் தற்கொலை

இந்நிலையில் வெளியே சென்ற கவுடா திரும்பவில்லை. கவுடா வீடு திரும்பாததால் பதட்டமடைந்த குடும்ப உறுப்பினர்கள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து ரயில்வே தண்டாளத்தில் இறந்த நிலையில் அவர் உடல் மீட்கப்பட்டுள்ளது. இவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

மரணமாவது எங்களுக்கு நிம்மதியைத் தரட்டும் – காவல்துறையால் தற்கொலை செய்துகொண்ட குடும்பம்

இந்தச் சம்பவம் குறித்து வருத்தத்தைத் தெரிவித்துள்ள கர்நாடக முதலமைச்சர் பி.எஸ்.எடியுரப்பா இது “துரதிர்ஷ்டவசமானது” என்று தெரிவித்துள்ளார். அவர் சட்டசபையின் துணை தலைவராக திறம்பட செயல்பட்டார் என இரங்கல் தெரிவித்துள்ளார்.

“அர்னாப் கோசாமியை கைது செய்ததற்கு நன்றி” – தற்கொலை செய்துகொண்டவரின் குடும்பம்

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் பிரதமருமான ஹெச்.டி.தேவேகவுடா ”அவர் ஒரு பண்புள்ள அரசியல்வாதி. அவரது மரணம் மாநிலத்திற்கு பேரிழப்பு” என்று ட்விட் செய்துள்ளார்.

மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ஹெச்.டி.குமாரசாமி ”அவருடைய மரணம் எனக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் நேர்மையான அரசியல்வாதி” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் சட்ட மேலவை உறுப்பினரான தர்மே கவுடாவுக்கு (64) ஒரு மகனும் மகளும் உள்ளனர். அவருடைய தம்பி எஸ்.எல்.போஜே கவுடாவும் சட்ட மேலவை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்