கர்நாடக மாநிலத்தில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், அம்மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, இரு தரப்பிலும் தவறுகள் இருக்கிறது என்று என்டிடிவி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மீதான தாக்குதல்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்த செய்தியாளர்கள் எழுப்பியுள்ள கேள்விக்கு பதிலளித்துள்ள அரக ஞானேந்திரா, “கிறிஸ்துவர்கள் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யவில்லை என்றால், அவர்கள் கிறிஸ்துவர்களைத் தடுக்கவோ குழப்பத்தை உருவாக்கவோ மாட்டார்கள். இந்த கட்டாய மதமாற்றங்கள் தொடர்பான நிகழ்வுகளை நிரூபிக்க மாநில அரசிடம் தரவுகள் உள்ளன” என்று கூறியுள்ளார்.
அத்தரவுகள் குறித்து செய்தியாளர்கள் மேலும் கேள்விகளை எழுப்பியுள்ளபோது, அவர் அளித்த பதில்களின் அடிப்படையில், இத்தரவுகள் குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலானவை என்றும் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அல்ல என்றும் தெரிய வருகிறது.
கட்டாய மதமாற்றத்தால் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வுகளும் நடந்ததாகக் கூறியுள்ள அரக ஞானேந்திரா, இது தொடர்பான புகார்கள் காவல்துறையால் பதிவு செய்யப்படுவதில்லை என்றும் காரணம் அத்தகைய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யக்கூடிய சட்டங்கள் எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடக மதமாற்ற தடுப்பு மசோதா என்று அழைக்கப்படும் கர்நாடக மத சுதந்திரத்திற்கான உரிமை பாதுகாப்பு மசோதா, 2021-ஐ, கர்நாடக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நேற்று(டிசம்பர் 23), பரவலான போராட்டங்களையும் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கும் மத்தியில் உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திராவின் இக்கருத்துக்கள் குறிப்பிடத்தக்கது.
Source: NDTV
தொடர்புடைய பதிவுகள்:
கர்நாடகா மதமாற்ற தடை மசோதா – எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி சட்டப்பேரவையில் நிறைவேறியது
கர்நாடகாவில் கிறிஸ்தவர்கள் மீது இந்துத்துவாவினர் தொடர் தாக்குதல் – நடவடிக்கை எடுக்குமா பாஜக அரசு?
கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் மதம்மாற்றம் நிகழ்வதாக ஆதாரம் இல்லை – கர்நாடக காங்கிரஸ்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.