Aran Sei

‘மத நல்லிணக்கத்திற்கு எதிராக சமூக ஊடகங்களில் மருத்துவர்கள் செயல்படக்கூடாது’ – கர்நாடக மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை

credits : The Indian Express

“மருத்துவர்கள் உட்பட மருத்துவத்துறையை சார்ந்தவர்கள் மக்களுடன் நேரடி தொடர்பில் இருப்பதாலும், அவர்களின் வார்த்தைகள் மக்களால் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுவதாலும், வகுப்புவாத நல்லிணக்கத்திற்கு எதிரான செயல்பாடுகளில் மருத்துவர்கள் பங்கேற்பது என்பது மருத்துவ தொழிலுக்கு எதிரானது” என்று கர்நாடக மருத்துவ கவுன்சில் மருத்துவர்களை எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக, அனைத்து மருத்துவர்களுக்கும் கர்நாடக மருத்துவ கவுன்சில் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

அதில், “சமூக வலைதளங்கள் வழியாக மத நல்லிணக்கத்திற்கு எதிராக சில மருத்துவர்கள் தீவிரமாக செயல்படுவதாக கவுன்சிலின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சாதி அல்லது மத வேறுபாடின்றி, ஒரு மருத்துவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். அவ்வாறு இருக்கையில், வகுப்புவாத நல்லிணக்கத்திற்கு எதிரான செயல்பாடுகளில் மருத்துவர்கள் பங்கேற்பது என்பது மருத்துவ தொழிலுக்கு எதிரானது” என்று கவுன்சில் சுட்டிக்காட்டியுள்ளார்.

புல்டோசர் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்த கர்நாடகா ஒன்றும் உத்திரபிரேதம் அல்ல: கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் கருத்து

“எனவே, கர்நாடகாவில் பணிபுரியும் அனைத்து மருத்துவப் பயிற்சியாளர்களும் வகுப்புவாத நல்லிணக்கம் தொடர்பான எந்தவொரு பிரச்சினையிலும் பங்கேற்க கூடாது. இதை மீறி செயல்பட்டு, அச்செயல் கர்நாடக மருத்துவ கவுன்சிலின் கவனத்திற்கு வந்தால், அது மருத்துவ மற்றும் தொழில்முறை நெறிமுறைகளை மீறும் செயல் என்பதால், சம்பந்தப்பட்டவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் தோராயமாக 1.7 லட்சம் மருத்துவர்கள் உள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் 55 ஆயிரம் தொடங்கி 60 ஆயிரம் மருத்துவர்கள் வரை தங்களது பதிவை புதுப்பித்துள்ளனர்.

Source: New Indian Express

angai Amaran | திருமாவை அம்பேட்கரோடு ஒப்பிட்டது சரிதான் | Sanga Tamizhan Interview

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்