Aran Sei

மாற்று மதத்தை சேர்ந்த பெண்ணுடன் பேருந்தில் பயணம் செய்த ஆண்: கத்தியால் குத்திய பஜ்ரங் தளத்தின் உறுப்பினர்கள்

credits : the indian express

மாற்று மதத்தைச் சேர்ந்த பெண்ணுடன் பேருந்தில் பயணம் செய்தவரை (ஆண்) பஜ்ரங் தளத்தின் உறுப்பினர்கள் கத்தியால் குத்தியுள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்தமார்ச் 2 ஆம்தேதி இரவு, கல்லூரியில் ஒரு வகுப்பைச் சேர்ந்த நண்பர்கள் இருவர் (ஆண், பெண்) மங்களூரில் இருந்து பெங்களூரு நோக்கிப் பயணம் செய்துள்ளனர். அந்தப் பெண்ணுக்குப் பெங்களூரு பற்றிப் பெரிய அறிமுகம் இல்லாததால் அவருக்குத் துணையாக அவருடைய நண்பர் (ஆண்) உடன் சென்றுள்ளார்.

உத்தர பிரதேசம் : இந்து முஸ்லிம் திருமணத்தைப் பதிவு செய்ய விடாமல் தடுத்த பஜ்ரங் தளம்

அந்தப் பேருந்து மங்களூரு மாநகரத்தை விட்டு வெளியே சென்று கொண்டிருக்கும்போது, ஒரு கும்பல் அந்தப் பேருந்தை, தடுத்து நிறுத்தி, அதில் பயணம் செய்த இருவரையும் பேருந்தில் இருந்து கீழே இறக்கியுள்ளனர். பின்னர், அந்தக் கும்பல், அந்த ஆணை கடுமையாக தாக்கி, அவரது இடுப்பில் கத்தியால் குத்தியுள்ளது. இதைத் தடுக்க முயன்ற பெண்ணும் சராமாரியாக தாக்கப்பட்டுள்ளார்.

“கிறிஸ்துமஸ் அன்று தேவாலயம் செல்லும் இந்துக்களை தாக்குவோம்” – பஜ்ரங் தளம் எச்சரிக்கை

இந்தச் சம்பவம் தொடர்பாக பேசிய மங்களூரு காவல்துறை ஆணையர், சஷி குமார், ”காரில் வந்த நான்கு நபர்கள் பேருந்தை நிறுத்தியுள்ளனர். அந்த ஆண் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். அவரது இடுப்பின் கீழ் கத்தியால் குத்தப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது” என்று கூறியதாக என்டிடிவியின் செய்தி கூறுகிறது.

சிறுபான்மையினருக்கு எதிராகச் செயல்படும் பஜ்ரங் தளம் – தடை செய்ய அச்சப்படும் ஃபேஸ்புக் நிறுவனம்

இந்நிலையில், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாக ஏழு பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை விசாரித்ததில் ஏழு பேரில் நான்கு பேர் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளதாக மங்களூரு காவல் ஆணையர் தெரிவித்துள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்