திப்பு சுல்தான் காலத்து மசூதியில் இந்துக்கள் பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று இந்துத்துவாவினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்திய தொல்லியல் துறையால் பராமரிக்கப்படும் பாரம்பரிய வழிபாட்டு தளங்களில் ஒன்றான இந்த மசூதி 1782 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
திப்பு சுல்தான் ஆட்சியின்போது ஸ்ரீரங்கப்பட்டணத்தில் ஜுமா மசூதி கட்டப்பட்டது. முன்பு அங்கு ஹனுமன் கோவில் இருந்தது எனக்கூறி அங்கு இந்துக்கள் பூஜை செய்து வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று மாண்டியா மாவட்ட நிர்வாகத்திடம் வலது சாரி அமைப்பான நரேந்திர மோடி விச்சார் மஞ்ச் அமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
மத வழிபாட்டுச் சட்டம் கியானவாபி மசூதிக்குப் பொருந்தாது: விஷ்வ இந்து பரிஷத் கருத்து
மே 14 தேதி மாண்டியா மாவட்டத்தின் துணை ஆணையரை, நரேந்திர மோடி விச்சார் மஞ்ச்சின் செயலாளர் சி.டி. மஞ்சுநாத் தலைமையிலான குழுவினர் சந்தித்து மனுவை அளித்தனர். அதில், மஸ்ஜித்-இ-அலா என்ற அழைக்கப்படும் ஜாமியா மசூதிக்குள் இந்துக்கள் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
”மசூதி முன்பு அனுமன் கோவிலாக இருந்துள்ளது. அதற்கான கல்வெட்டுகள் மசூதியின் தூண்களில் உள்ளது. இதை ஆமோதிக்கும் விதமாக பாரசீக மன்னருக்கு திப்பு சுல்தான் எழுதிய ஆவணங்களும் உள்ளது. எனவே, பூஜை செய்ய மசூதியின் கதவுகளை திறக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.
முன்னதாக மசூதியை இடிக்கப்போவதாக மிரட்டியதற்காக காளி மடத்தைச் சேர்ந்த ரிஷி குமார் சுவாமி என்பவர் கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையின் விடுவிக்கப்பட்டுள்ளார்.
”ஸ்ரீரங்கப்பட்டணத்தில் உள்ள மசூதி ஒரு காலத்தில் இந்து கோவிலாக இருந்துள்ளது. அதன் கட்டடக்கலையும் அதை நிரூபிக்கிறது. சுப்பு சுல்தான் காலத்தில் அது மசூதியாக மாற்றப்பட்டுள்ளது. பாபர் மசூதியை இடித்ததைப் போலவே ஜமா மசூதியும் இடிக்கப்பட வேண்டும். எனவே, இந்து மக்கள் விழுத்தெழுங்கள். இது மிகவும் முக்கியமாக செய்யப்பட வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
Source: The Wire
தமிழ்நாட்டை காட்டி கொடுக்கும் துரோகிகள் | Thiyagu Interview | Annamalai on Mullivaikkal | BJP
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.