Aran Sei

பள்ளி மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்களும் ஹிஜாப் அணியக் கூடாது – கர்நாடக கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ்

ர்நாடக பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி, ஆசிரியர்களும் ஹிஜாப் அணியக் கூடாது என்று கர்நாடக மாநில தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, நேற்று (ஏப்ரல் 4), ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசியுள்ள அமைச்சர், “சீருடையைக் கட்டாயமாக்கி இருக்கிறோம். பள்ளிக் குழந்தைகள் எப்படி உடையணிந்து வருகிறார்கள் என்பதையும் பார்க்க வேண்டியது ஒவ்வொரு ஆசிரியரின் தார்மீகக் கடமை. ‘மாணவர்களுக்கு மட்டும் ஹிஜாப் அணியக் கூடாது என நீங்கள் தடை செய்கிறீர்கள். ஆனால், ஆசிரியர்கள் ஹிஜாப் அணிகிறார்கள்’ என பல பள்ளிகளில் மாணவர்கள் எங்களிடம் கேள்வி எழுப்பினர்.எனவே, ஆசிரியர்களும் ஹிஜாப் அணியக் கூடாது. வகுப்பறையில் மாணவர்கள் முன்னால் நின்று ஆசிரியர்கள் பாடம் நடத்துகிறார்கள் என்பதால் அதைச் செய்ய வேண்டாம் என்று நாங்கள் அவர்களிடம் கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

கர்நாடகா 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு – ஹிஜாப் அணிந்த மாணவிகளை தேர்வு எழுத அனுமதித்த 7 ஆசிரியர்கள் இடைநீக்கம்

“பெரும்பாலான ஆசிரியர்கள் ஹிஜாப் இல்லாமலேயே பணி செய்து வருகிறார்கள். சில ஆசிரியர்கள்தான் ஹிஜாப் வேண்டும் என கேட்கிறார்கள். நாங்கள் அவர்களை வற்புறுத்தவில்லை. அவர்கள் தேர்வுக் கண்காணிப்பார் பணிக்கு வரலாம் அல்லது வராமலும் இருக்கலாம்” என்று அவர் கூறியுள்ளார்.

Source: ANI

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்