கர்நாடக மாநில கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்த கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
கடந்த மார்ச் 15 அன்று, உடுப்பியில் உள்ள அரசு பெண்கள் கல்லூரியைச் சேர்ந்த இஸ்லாமிய மாணவிகள் வகுப்பறைக்குள் ஹிஜாப் அணிய அனுமதி கோரி தாக்கல் செய்த மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் சமத்துவம், ஒருமைப்பாடு மற்றும் பொது ஒழுங்கை சீர்குலைக்கும் ஆடைகளை அணிவதை பிப்ரவரி 5, 2022 அன்று மாநில அரசு தடை செய்தது.
உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
தமிழ்நாட்டில் கற்றல் இடைவெளியை குறைத்த இல்லம் தேடி கல்வி திட்டம் – பல்கலைக்கழக ஆய்வில் தகவல்
நீதிபதிகள் ஹேமந்த் குப்தா மற்றும் சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கின் தீர்ப்பை வருகின்ற வியாழக்கிழமை ஒத்திவைத்துள்ளது.
Source: newindianexpress
Who is behind the Communal Violence in Leicester ? Asia Cup | India vs Pakistan | Deva’s Update 27
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.