Aran Sei

ஹிஜாப் விவகாரம் – உயர்நீதிமன்ற தீர்ப்பால் தேர்வுகளை தவறவிடும் இஸ்லாமிய மாணவிகள்

ல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இஸ்லாமிய மாணவிகளில் ஒரு பகுதியினர் மட்டுமே தேர்வுகளில் பங்கேற்றனர்.

உடுப்பி மாவட்டம் கௌப் பகுதியில் உள்ள முதல்நிலை அரசு கல்லூரியில் 17 இஸ்லாமிய மாணவிகளில் 4 பேர் மட்டுமே ஹிஜாப் அணியாமல், தேர்வில் கலந்து கொண்டனர். 9 மாணவிகள் ஹிஜாப்பை அகற்ற மறுத்துவிட்டனர். மீதமிருப்பவர்கள் கல்லூரிக்கு வரவில்லை.

குண்டப்பூரில் உள்ள அரசு கல்லூரியில் 2 முதலாமாண்டு மாணவிகள் மட்டுமே ஹிஜாப் அணியாமல் தேர்வு எழுதினர். 11 மாணவிகள் தேர்வு எழுதவில்லை.

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படமும் பிரதமர் மோடியும் – அ.மார்க்ஸ்

மங்களூருவில் உள்ள பி. தயானந்த் சாய் மற்றும் பி. சதிஷ் சாய் அரசு முதல்நிலை கல்லூரியில் மார்ச் 5 தேதியில் இருந்து விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. ஹிஜாப் வழக்கின் தீர்ப்புக்குப் பிறகு முதுநிலை மாணவர்களுக்கான வகுப்புகள் மார்ச் 16 தேதி தொடங்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு இஸ்லாமிய மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்துள்ளனர்.

கல்லூரியின் முதல்வர் ராஜசேகர் ஹெப்பர், ”மார்ச் 5 தேதி நடைபெறவிருந்த தேர்வுகள் ஹிஜாப் விவகாரம் காரணமாக தள்ளி வைக்கப்பட்டன. இளங்கலை மாணவர்களுக்கு இன்று (மார்ச் 17) தேர்வுகள் தொடங்குகின்றன. இந்த கல்லூரியில் 2,382 மாணவிகள் உள்ளனர், அதில் 33 பேர் இஸ்லாமியர்கள். உயர்நீதிமன்ற உத்தரவின்படி கல்லூரி வளர்ச்சிக்குழு பரிந்துரைத்த சீருடைகளை மாணவிகள் பின்பற்ற வேண்டும். வகுப்பறைக்குள் நுழையும் முன் ஹிஜாப்பை அகற்ற மாணவிகளுக்குத் தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளார்.

சிமோகா மாவட்டத்தில் உள்ள கமலா நேரு முதல்நிலை கல்லூரியில் பயிலும் 19 மாணவிகள் தேர்வைப் புறக்கணித்துள்ளனர். ஹிஜாப் அணிந்து வந்ததற்காக வகுப்பறைக்குள் அனுமதிக்காததைத் தொடர்ந்து மாணவிகள் வீடு திரும்பியுள்ளனர்.

அசுத்தமானது பெண்களின் மாதவிடாயா? பாஜகவினரின் அறிவா? – சூரியா சேவியர்

இது தொடர்பாக பேசிய மாணவிகள், நாங்கள் கட்டணம் செலுத்தி தான் சேர்ககை பெற்றுள்ளோம். எங்களை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

ஹசன் மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரியில் புதன்கிழமை (மார்ச் 16) மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

”புதின்கிழமை சீருடை கிட்டாயம் கிடையாது என்பதால் நாங்கள் ஹிஜாப் அணிந்து வகுப்பில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டோம். மற்ற நாட்களில் அனுமதி கிடையாது நாங்கள் ஹிஜாபை அகற்றி தான் ஆக வேண்டும். நாங்கள் இத்தனை ஆண்டுகளாக ஹிஜாப் அணிந்து வகுப்புகளில் கலந்து கொண்டோம். திடீரென்று மாற்றுவதற்கு கடினமாக உள்ளது.”என ஒரு மாணவி கூறியுள்ளார்.

வகுப்பறைக்குள் நுழைவதற்கு முன் ஹிஜாபை அகற்ற வேண்டும் என்றால் என் பெற்றோர்கள் என்னை கல்லூரிக்கு அனுப்ப மாட்ட்டார்கள் என மற்றொரு மாணவி தெரிவித்துள்ளார்.

Source : The Hindu

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்