Aran Sei

‘தடுப்பூசி கிடைக்காததால், நாளை 18 முதல் 44 வயதிற்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசி முகாம் நடக்காது’ – தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகாவும் அறிவிப்பு

தேவையான தடுப்புசிகள் கிடைக்க பெறாததால், நாளை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட 18 வயது மேற்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி முகாமை நடத்த இயலாது என்று கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் கே.சுதாகர் தெரிவித்துள்ளார்.

இன்று (ஏப்ரல் 30), செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ள டாக்டர் கே.சுதாகர், “18 வயதிலிருந்து 44 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான தடுப்பூசி முகாமை திட்டமிட்டப்படி நாளை தொடங்க முடியாது. முகாம் நடைபெறும் தேதி முடிவு செய்யப்பட்டபின், நாங்களே அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்.” என்று தெரிவித்துள்ளார் பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

‘தேவையான தடுப்பூசிகள் இல்லை; நாளை 18 முதல் 44 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி முகாம் நடத்த இயலாது’ – சென்னை மாநகராட்சி ஆணையர்

மேலும், அச்செய்தியில், “பூனேவில் உள்ள சீரம் நிறுவனத்திடம் ஒரு கோடி தடுப்பூசிகள் ஆர்டர் கொடுத்திருந்தோம். அவர்களிடமிருந்த வந்த அதிகாரப்பூர்வ தகவலின் படி, இன்னும் அவர் அவற்றை தயாரித்து முடிக்கவில்லை என்று தெரிகிறது. அவர்களால், திட்டமிட்டப்படி நாளை ஆர்டர் செய்த தடுப்பூசிகளைக் கொடுக்க முடியாது. ஏற்கனவே, ஆர்டர் கொடுத்த ஒரு கோடி தடுப்பூசிகளுக்கான விலையாக 400 கோடி கொடுக்கப்பட்டுவிட்டது.” என்று டாக்டர் கே.சுதாகர் கூறியுள்ளார்.

முன்னதாக, நாளை (மே 1) தொடங்கவுள்ள 18 வயதிலிருந்து 44 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான தடுப்பூசி முகாமிற்கு தேவையான தடுப்பூசிகள் மருந்து நிறுவனங்களிடம் இருந்து கைக்கு வந்தால்தான், எங்களால் அம்முகாமை நடத்த முடியும் என்றும் தமிழ்நாட்டிற்கு வழங்கவுள்ள தடுப்பூசி எண்ணிக்கைகுறித்த விபரங்களை இன்னும் மத்திய அரசு வழங்கவில்லை என்றும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்