Aran Sei

கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபரின் ஜாமீன் மனு தள்ளுபடி – கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு

2017 ஆம் ஆண்டு பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில்   குற்றம்சாட்டப்பட்ட முக்கிய நபரான மோகன் நாயக்கின்  பிணை மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி  செய்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

வன்கொடுமைகளைத் தடுக்க மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுவை திருத்தி அமைக்க வேண்டும்- முதலமைச்சருக்கு திருமாவளவன் வேண்டுகோள்

கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி அன்று,  அம்மாநில உயர்நீதிமன்ற அமர்வு குற்றம்சாட்டப்பட்ட மோகன் நாயக்கின் மீதான  கர்நாடக மாநில ஒருங்கிணைந்த குற்றத் தடுப்புச் சட்டம் 2000 ஐ நீக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், இதைத்தொடர்ந்து  குற்றம்சாட்டப்பட்டுள்ள மேலும் ஐந்து பேரும் அவர்களின் மீதான  கர்நாடக மாநில ஒருங்கிணைந்த குற்றத் தடுப்புச் சட்டம் 2000 ஐ  நீக்க வேண்டுமென  நீதிமன்றத்தை நாடி இருந்ததாகவும் அந்த செய்தி  குறிப்பிடுகிறது.

டெல்லியில் தகர்க்கப்பட்ட கிறிஸ்தவ ஆலயமும் இந்தியக் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்களும் – அ.மார்க்ஸ்

இந்நிலையில், மோகன் நாயக்கின் மீதான  கர்நாடக மாநில ஒருங்கிணைந்த குற்றத் தடுப்புச் சட்டம் 2000  நீக்கப்பட்டிருந்தாலும், அவரது ஜாமீன் மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் ரத்து  செய்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் கூறப்பட்டிருந்தது.

பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கடந்த செப்டம்பர் 5 ,2017 அன்று  பெங்களுருவில் உள்ள அவரது  வீட்டின் முன்பே இரண்டு மோட்டார் வாகனங்களில் வந்த இந்துத்துவவாதிகளால்  கொல்லப்பட்டார் என்பது நினைவு கூரத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்