Aran Sei

‘பாலியல் குற்றஞ்சாட்டப்பட்ட அமைச்சருக்கு ஆதரவாக செயல்படும் பாஜக அரசு’ – பெண்ணுரிமை செயல்பாட்டாளர்கள் கண்டனம்

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி பதவி விலகிய அமைச்சரை விசாரிக்க, கர்நாடக அரசு நியமித்துள்ள சிறப்பு புலனாய்வு படை அமைச்சருக்கு ஆதரவாகச் செயல்படுவதாகப் பெண்ணுரிமை செயல்பாட்டாளர்கள் குற்றம் சாட்டியுள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

அரசுவேலை பெற்று தருவதாகச் சொல்லிப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோலியின் ஆபாச காணொளி தொலைக்காட்சிகளில் வெளியானதை தொடர்ந்து அவர் பதவி விலகினார்.

சமூக ஒழுங்கிற்கு தீங்கு விளைவிக்கும் நிகழ்ச்சிகளுக்கு தடை – கர்நாடக காவல் துறை

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய பெண் சார்பாகப் புகார் அளித்தவர், பணம் வாங்கிக்கொண்டு புகார் அளித்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து அந்தப் புகார் திரும்பப் பெறப்பட்டது.

இந்நிலையில் அவர்மீதான குற்றச்சாட்டு குறித்து ஜார்கிஹோலி, கர்நாடக உள்துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்திற்கு பின் இந்தச் சிறப்பு புலனாய்வு படை அமைக்கப்பட்டுள்ளது என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சர் மீது பாலியல் குற்றச்சாட்டு: செய்தி வெளியிடுவதற்கு முன் ஆதாரங்களை சரி பாருங்கள்- ஊடகங்களை கண்டித்த பெங்களூரு நீதிமன்றம்

காவல் துறையில் முறையான புகார் அளிக்கப்படாமல் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டிருப்பது மேலும் கேள்விகளை எழுப்பியுள்ளதாக தி வயர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ள கர்நாடக தலித் பெண்கள் அமைப்பின் தலைவர் ஜெயஸ்ரீ , கர்நாடக அரசு பாஜக அமைச்சர் ரமேஷ்யின் கௌரவத்தை காப்பாற்ற முயற்சிப்பதாகவும், அமைச்சர் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது குறித்து யாருக்கும் சிந்திக்க தோன்றவில்லை என்றும் தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அகில இந்திய பெண்கள் சம்மேளனத்தின் மாநில துணைத்தலைவர் கே.நீலா , பாலியல் வன்கொடுமை குற்றங்களில் பெண்கள் மீதே குற்றம்சாட்டப்படுவதாகவும் ,இந்த அரசு ஜார்கிஹோலியையே பாதுகாக்கிறது என்றும் தெரிவித்துள்ளாரென தி வயர் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பாலியல் வழக்கில் ராஜினாமா செய்த கர்நாடக அமைச்சர் – புகாரளித்தவர் மிரட்டப்படுவதாக குற்றச்சாட்டு

மேலும், கர்நாடக அரசு உத்தர பிரதேச அரசைப் பின்பற்றிவருவதாகவும் , பாதிக்கப்பட்ட பெண்களைப் புறந்தள்ளி வில்லன்களைக் காப்பாற்றுகிறது என்றும் பெண்கள் சம்மேளனத்தின் மாநில துணைத்தலைவர் கே.நீலா தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து பேசிய வழக்கறிஞர் பீமனகௌடா , “தொடக்கத்தில் இருந்தே பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணும் இதில் உடந்தை எனபது போன்ற போலியான தோற்றம் நிலவுவதாகவும், முதற்கட்ட ஆய்விலேயே இது பொய் என்று தெரியவந்துள்ளது” என கூறியுள்ளதாகவும் தி வயர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்