கும்பமேளா சென்று திரும்பும் அனைவரும் கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென கர்நாடக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
ஹரித்வார் கும்பமேளாவில் ஒரே நாளில் 13 லட்சம் பேர் நீராடல் : காற்றில் பறக்கும் கொரோனா கட்டுப்பாடுகள்
கர்நாடக மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ள அந்த அறிவிப்பில் , “உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் நடைபெற்று வரும் கும்பமேளா நிகழ்வில் பங்கேற்றுள்ள பக்தர்கள்/ பார்வையளர்களாகப் பங்கேற்ற அனைவரும் ஆர்.டீ – பி.சி.ஆர் சோதனை மேற்கொள்ள வேண்டும். கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்றால் இயல்பாகப் பணிகளை மேற்கொள்ளலாம் ” எனவும் குறிப்பிட்டுள்ளது.
கும்பமேளா செல்பவர்கள் 72 மணிநேரத்திற்குள் முன்பு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழ் சமர்ப்பித்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று உத்தரகண்ட் மாநில அரசு அறிவித்திருந்தது.
ஒரே நாளில் 30 லட்சம் பேர் பங்கேற்ற ஹரித்வார் கும்பமேளா : நான்கு நாட்களில் 1086 கொரோனா தொற்றுகள்
இந்நிலையில், கும்பமேளாவிற்கு சென்றவர்களுக்குக் கொரோனா தொற்றுகள் குறித்து செய்தி வெளியாகும் நிலையில் கர்நாடக சுகாதாரத் துறையும் இவ்வாறு அறிவித்துள்ளது.
Kumbh mela returnees to take compulsory RTPCR test upon returning.https://t.co/agkih9oAQr pic.twitter.com/roUoA5GoWJ
— K'taka Health Dept (@DHFWKA) April 15, 2021
இதுகுறித்து அம்மாநில அரசின் சுகாதாரத்துறை ட்விட்டரிலும்
பதிவிடப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.