Aran Sei

புதிய வேளாண் சட்டங்கள் எதிரொலி: அமித்ஷாவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகத்தில் குவிந்த விவசாயிகள்

கர்நாடகாவுக்கு வருகை தந்துள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

பாஜக முன்னாள் தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா இரண்டு நாள் பயணமாக கர்நாடக மாநிலத்துக்குச் சென்றுள்ளார். நேற்றைய தினம் (16-1-21) ஷிவமோகா மாவட்டத்தில் உள்ள பத்ராவாதியில் விரைவு அதிரடி படையின் (Rapid Action Force) மையத்திற்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

இன்றைய தினம் அவர் பெலகாவி, பாகல்கோட் ஆகிய மாவட்டங்களில் நடைபெறுகிற பேரணிகள் மற்றும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ள இருக்கிறார். மேலும், கர்நாடக பாஜகவின் நிர்வாகிகள் மற்றும் செயலாளர்களையும் அமித்ஷா சந்திக்க இருக்கிறார்.

‘அந்த கரடி பொம்மை எவ்வளவு?’ – அமித்ஷாவை கிண்டல் செய்த ஸ்டாலின்

இந்நிலையில், பெலாகாவி மாவட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு நூற்றுக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

“பேச்சுவார்த்தையை அமித்ஷா திசை திருப்பினார்” – போராடும் விவசாயிகள் குற்றச்சாட்டு

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்கள் ’விவசாயிகளை தங்கள் சொந்த கிராமத்திலேயே கூலித் தொழிலாளியாக மாற்றும்’ என கோஷங்களை எழுப்பி வரும் விவசாயிகள், அமித்ஷாவின் வருகையின் போது தரையில் உருளும் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

அமித்ஷாவை பகடி செய்து கைதான நகைச்சுவை நடிகர் – பிணை மறுத்த நீதிமன்றம்

இந்தப் போராட்டத்தில் கர்நாடக ராஜ்ய ராய்தா சங்கத்தின் தலைவர்கள், ஹசிரு சேன சூணப்பா புஜாரி, பிரகாஷ் நாயக் மற்றும் பலர் கலந்து கொண்டுள்ளனர். மத்திய அரசு வேளாண் சட்டங்களைத் திரும்ப பெறாவிட்டால் போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

டெல்லி கலவரத்தில் அமித்ஷாவுக்கு தொடர்பிருப்பதாக கூறிய வழக்கறிஞர் வீட்டில் சோதனை – நீதித்துறையினர் கண்டனம்

சமீபத்தில், கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு எதிராக பல மூத்த பாஜக தலைவர்கள் போர்க்கொடியை உயர்த்தியிருந்தனர். இதற்கு பதிலளித்திருந்த எடியூரப்பா ”பாஜக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் அவர்கள் டெல்லிக்குச் செல்லலாம், நமது தேசியத் தலைவர்களைச் சந்தித்து புகார்களை கொடுக்கலாம். நான் அதை எதிர்க்க மாட்டேன், ஆனால் அவதூறாக பேசுவதன் மூலம் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டாம் என்று நான் அவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன் ” என்று தெரிவித்திருந்தார்.

திரிணாமூல் காங்கிரசுடன் தொடர்பில் இருக்கும் 7 பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள்: பாஜக திரிணாமூல் காங்கிரசிடையே வலுக்கும் மோதல்

அமித்ஷாவின் கர்நாடக வருகையால் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாஜக தலைவர்கள் அமித்ஷாவை சந்தித்து முறையிடுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்