Aran Sei

கர்நாடகா: பட்டியலினப் பெண் தண்ணீர் அருந்தியதால் நீர்த்தொட்டியில் பசு மூத்திரம் ஊற்றிக் கழுவிய ஆதிக்க சாதியினர் – அமைச்சர் சோமண்ணா கண்டனம்

ர்நாடகாவில் சம்மராஜநகர் மாவட்டத்தில் பொது நீர்த்தொட்டி ஒன்றிலிருந்து பட்டியலினப் பெண் ஒருவர் தண்ணீர் அருந்தியதால் அந்தத் தொட்டியிலிருந்த மொத்த தண்ணீரையும் வெளியேற்றிவிட்டு தொட்டியில் பசு மூத்திரம் தெளித்து ஆதிக்க சாதியினர் சுத்தம் செய்துள்ளனர்.

சம்மராஜநகர் ஹக்கோடோரா கிராமத்தில் நவம்பர் 19 அன்று இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்தப் பகுதியில் லிங்காயத்து சாதியினர் அதிகம் வசிக்கின்றனர். அச்சமூகத்தினரின் பயன்பாட்டிற்காக உள்ள அந்த நீர்த்தொட்டியிலிருந்து பக்கத்து ஊரைச் சேர்ந்த பட்டியலின பெண் தண்ணீர் அருந்தியுள்ளார். இதனையடுத்து அந்தத்தொட்டியின் நீர் வீணாக வெளியேற்றப்பட்டுள்ளது.

கர்நாடகா: கோயிலில் வழிபாடு செய்ய வந்த தலித் குடும்பத்தினரை விரட்டி அடித்த அர்ச்சகர் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

இது சம்பந்தமான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக வட்டாட்சியர், சமூக நலத்துறை அதிகாரிகள் அங்குச் சென்றனர். அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது உள்ளூர்க்காரர் ஒருவர், வெள்ளிக்கிழமையன்று கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் திருமணம் நடைபெற்றது. அந்தத் திருமணத்திற்காக அருகிலுள்ள ஹெச்டி கோட்டே பகுதியிலிருந்து ஒரு பெண் வந்திருந்தார். அவர் பேருந்துக்காக நின்றிருந்த போது ஊர் பொது தொட்டியிலிருந்து தண்ணீர் அருந்திவிட்டு பேருந்தில் ஏறினார். அதனைப் பார்த்த ஊர் மக்கள் தொட்டியிலிருந்த தண்ணீரை வெளியேற்றி விட்டு அதை சுத்தம் செய்வதாகக் கூறி பசு மூத்திரம் ஊற்றினர் என்றார். விசாரணையை முடித்த வருவாய் ஆய்வாளரும், கிராம கணக்காளரும் அறிக்கையை வட்டாட்சியரிடம் சமர்ப்பித்துள்ளனர்.

இதுகுறித்து வட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டாலும், சம்பந்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தலித் இளைஞர்கள் அதிகாரிகளின் செயல்பாடுகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

கர்நாடகா: தங்க காதணி திருடியதாக கூறி தலித் சிறுவனை மின் கம்பத்தில் கட்டிவைத்து தாக்கிய ஆதிக்க சாதியினர் – 10 பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு

இந்நிலையில் நேற்று (நவம்பர் 21) இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட பொறுப்பு அமைச்சர் சோமண்ணா ‘தலித் மக்களை புறக்கணிப்பது கண்டனத்திற்குரியது. சம்பந்தப்பட்டவர்கள் மீது மாவட்ட ஆட்சியர் உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும். இனி இதுபோன்ற சம்பவங்கள் அந்த பகுதியில் நடைபெறாவாறு பார்த்துக் கொள்ளவேண்டும். குடிநீரை அனைவரும் பயன்படுத்த சம உரிமை அளிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளார்.

Source : NDTV

ஓவர்நைட்டில் ஒபாமா ஆக ஆசை | சொந்த வீட்டையே கொளுத்தும் சங்கிகள் | Aransei Roast | hindu munnani

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்