Aran Sei

கர்நாடகா: இந்து அல்லாதவர் கோயில் இடங்களில் கடை வைக்க தடை விதித்ததே காங்கிரஸ்தான் – காங்கிரஸ் எம்எல்ஏவின் கேள்விக்கு பாஜக அமைச்சர் பதில்

ர்நாடக இந்து சமய நிறுவனங்கள் மற்றும் அறநிலையத்துறை சட்டத்தின்படி, கோவில்களுக்குச் சொந்தமான இடங்களில் இந்து அல்லாத வியாபாரிகள் வியாபாரம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இச்சட்டம்  காங்கிரஸ் ஆட்சியில் இயற்றப்பட்டது என கர்நாடக சட்டப்பேரவையில் சட்டத்துறை அமைச்சர் ஜே.சி.மதுசாமி தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் கடலோர கிராமங்களில் உள்ள கோயில்களிலும் மேலும், அதைச் சுற்றியுள்ள கோயில்களிலும் இந்துக்கள் அல்லாதவர்கள் வியாபாரம் செய்வதைத் தடுக்க கோயில் கமிட்டிகள் முடிவு செய்துள்ளன. மேலும் இது தொடர்பாக கோயில்களின் அருகே இந்து அல்லாதவர்கள் கடை வைக்கக் கூடாது என்று பேனர்கள் மற்றும் சுவரொட்டிகளை சில அமைப்பினர் வைத்துள்ளனர். இப்பிரச்சனை தொடர்பாக காங்கிரஸ் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்குக் கர்நாடக சட்ட அமைச்சர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

வேதங்களின் நாடா இந்தியா? வரலாற்றைத் திரிக்கும் இந்துத்துவாவினர் – சூர்யா சேவியர்

சமூகத்தில் அமைதியை சீர்குலைக்கும் இது போன்ற சம்பவங்களை அரசு ஊக்குவிப்பதாக யாரும் நினைக்கக் கூடாது என்றும் அமைச்சர் கூறியுள்ளார். இதில்,  அரசுக்கு எந்தப் பங்கும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விதிகள் பாஜகவால் வகுக்கப்படவில்லை என்றும், அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ்தான் வகுத்தது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். சாலைகளிலும், கோவில்களுக்கு வெளியேயும் பேனர்கள் வைக்கப்பட்டால் மட்டுமே, குற்றவாளிகள் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் சட்ட அமைச்சர் கூறியுள்ளார்.

பூஜ்ஜிய நேரத்தில் இப்பிரச்சினையை எழுப்பிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்  யு.டி. காதர், கோயில்களுக்கு அருகில் உள்ள தெருவோர வியாபாரிகள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக கடினமாக உழைக்கிறார்கள். அவர்கள் திருடவோ அல்லது கொள்ளையில் ஈடுபடவோ இல்லை. இந்துக்கள் அல்லாதவர்கள் கோயிலுக்கு அருகே கடை போடக் கூடாது என்று வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பேனர்கள், போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த சுவரொட்டிகளை ஒட்டியது யார் என்று குறிப்பிடவில்லை. இது போன்ற செயல்களில் ஈடுபடும் இவர்கள் கோழைகள். சமூகத்தில் அமைதியை சீர்குலைக்க விரும்பும் வகுப்புவாத சக்திகளால் இந்த தீமைகள் செய்யப்படுகின்றன. காவல்துறையினரும் வழக்குப் பதிவு செய்ய மறுக்கின்றனர். இது ஷிவமொகாவில் தொடங்கி, கடலோரப் பகுதிகளை அடைந்து, தற்போது மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பரவியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

அம்மா மினி கிளினிக் பணியாளர்களை பணி நீக்கம் செய்யும் உத்தரவை திரும்பப் பெறுங்கள் – தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ வேண்டுகோள்

சிவாஜிநகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரிஸ்வான் அகமது கூறுகையில், பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்கள் பல ஆண்டுகளாக ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். அனைத்து மத கொண்டாட்டங்களுக்கும் அனைத்து மதத்தினரின் பங்களிப்பும் உண்டு. ஆனால் ஒரு குறிப்பிட்ட மதத்தை தடை செய்வது ஒரு ஆபத்தான போக்கு, மேலும் அது கெட்டதில் இருந்து மோசமாக மாறக்கூடும்” என்று அவர் கூறியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்