Aran Sei

தாராளமயம், உலகமயமாக்கலின் ஒரு பகுதிதான் விவசாய சட்டங்கள் – கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை

மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்யும் பிரதமர் நரேந்திர மோடியின் முடிவுக்கும், ஐந்து மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டபேரவைத் தேர்தல்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பாஜகவைச் சேர்ந்த கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மறுத்துள்ளார்.

இன்று(நவம்பர் 19), காலை பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்காக உரையாற்றியுள்ளார். அப்போது, “மூன்று விவசாய சட்டங்களை திரும்பப் பெற நாங்கள் முடிவு செய்துள்ளோம். இது தொடர்பான நடவடிக்கைகள் வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மேற்கொள்ளப்படும்” என்று அறிவித்தார்.

இதுதொடர்பாக, செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ள பசவராஜ் பொம்மை, “எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் இடைத்தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றோம். ஐந்து மாநில சட்டபேரவைத் தேர்தல்களுக்கும் பிரதமரின் முடிவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இச்சட்டங்கள் குறித்து மேலும் சில விவாதங்கள் அவசியம் என பிரதமர் உணர்ந்துள்ளார். அதனாலேயே, விவசாயச் சட்டங்களை திரும்பப் பெறுவது மக்கள் மத்தியில் நம்பிக்கையை வளர்க்கும் என்று அரசு கருதியது. இது பிரதமரின் உணர்திறனை காட்டுகிறது” என்று கூறியுள்ளார்.

‘ஏமாற்றம், வெட்கக்கேடு, முற்றிலும் நியாயமற்றது’ – வேளாண் சட்டங்கள் திரும்பப் பெற்றது குறித்து கங்கனா ரனாவத்

“வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக பிரதமர் அறிவித்துள்ளார். இது உணர்வுப்பூர்வமான அரசு. விவசாயிகளின் கோரிக்கைக்கு நாங்கள் பதிலளித்துள்ளோம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

விவசாய சட்டங்களைக் நீக்க கோரி, ஓராண்டு நீடித்த விவசாயிகளின் போராட்டத்திற்கு ஒன்றிய அரசு பணிந்ததாக கூறியதை நிராகரித்துள்ள பசவராஜ் பொம்மை, “இந்த தாராளமயமாக்கலும் உலகமயமாக்கலும் செயல்முறை 1991-92 ஆம் ஆண்டு வாக்கில் தொடங்கியது. அதன் ஒரு பகுதியாக, பல்வேறு சட்டங்கள் உருவாக்கப்பட உள்ளன. மேலும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கமானது உலக வர்த்த அமைப்புடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. விவசாய சீர்திருத்தங்களும் விவசாய சந்தைப்படுத்தல் சீர்திருத்தங்களும் அதன் ஒரு பகுதியாகும்”என்று குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் ஆட்சியின் போதே, விவசாய சட்டங்களின் வரைவு மசோதா நிலுவையில் இருந்தது என்றும் அம்மசோதாக்களில் சில மாற்றங்களைக் கொண்டு வந்ததோடு, விவசாயிகளுக்கு உரிய வருமானத்தை வழங்க அனைத்து மாநிலங்களின் ஒருமித்த கருத்தையும் எடுத்த பிறகு நாங்கள் சட்டமியற்ற முடிவு செய்தோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

வேளாண் சட்டத்தை திரும்பப் பெற்ற ஒன்றிய அரசு: ‘அநீதிக்கு எதிராக போராடியவர்களின் வெற்றி’ – ராகுல்காந்தி

இருப்பினும், பஞ்சாப், ஹரியானா மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிற மாநில விவசாயிகள், ஒழுங்குமுறையாக்கப்பட்ட சந்தை முறையை வலியுறுத்தி ஓராண்டாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர் என்று பசுவராஜ் பொம்மை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Source: The Hindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்