Aran Sei

கர்நாடகாவில் மத மாற்றத்தடைச் சட்டத்தை இயற்ற முடிவு – முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவிப்பு

ட்டாய மத மாற்றத்திற்கு எதிரான சட்டத்தை இயற்ற கர்நாடக அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது என்று பாஜகவைச் சேர்ந்த மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

இன்று (செப்டம்பர் 28), கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய பசவராஜ் பொம்மை, “மதமாற்ற சட்டங்கள் அங்கும் இங்கும் இயற்றப்பட்டுதான் வருகின்றன. தூண்டுதல் வழியாகவோ அல்லது கட்டாயமாகவோ ஒருவரை மதம் மாற்றப்படுவதை அனுமதிக்கக் கூடாது என சில நாட்களுக்கு முன்பு மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டிருந்தேன். அது சட்டவிரோதமானது.” என்று கூறியுள்ளார்.

மேலும், மத மாற்றத்திற்கு எதிரான சட்டத்தை கர்நாடகாவில் இயற்ற தீவிரமாக பரிசீலித்து வருகிறோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கறுப்புச் சட்டத்தில் நடக்கும் வேட்டை – லவ் ஜிகாத் என்ற பெயரில் 7 பேர் கைது

கடந்த வாரம் சட்டமன்றத்தில் பேசிய மாநில உள்துறை அமைச்சர் அரகா ஞானேந்திரா, மத மாற்றத்தை ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு சட்டத்தை இயற்றுவது பற்றி அரசு யோசித்து வருவதாக தெரிவித்திருந்தார்.

இதற்கு முன்னர், பாஜக ஆளும் மாநிலங்களான உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் ஹிமாசல் பிரதேச மாநிலங்களில் மதமாற்ற தடைச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்