Aran Sei

கர்நாடகா: பாஜக அமைச்சர் மீது ஊழல் குற்றம் சாட்டிய பாஜக உறுப்பினர் தற்கொலை – அமைச்சரைக் கைது செய்தால் தான் இறுதிச் சடங்கு நடத்துவோம் என பாதிக்கப்பட்ட குடும்பம் வேதனை

ர்நாடக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்திய பாஜகவின் உறுப்பினரும், ஒப்பந்ததாரருமான சந்தோஷ் பட்டீல் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக கே.எஸ்.ஈஸ்வரப்பா மீது இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 306 (தற்கொலைக்குத் தூண்டுதல்) கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

தேசியக்கொடியை அவமதித்த ஈஸ்வரப்பாவை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் – கர்நாடக ஆளுநரிடம் காங்கிரஸார் மனு

“அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா தான் சந்தோஷ் பட்டீலின் மரணத்திற்குக் காரணம். அவரை கைது செய்யும் வரை நாங்கள் இறுதிச் சடங்கு நடத்த மாட்டோம்” என சந்தோஷ் பாட்டீலின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

பா.ஜ.க-வின் உறுப்பினரும், ஒப்பந்ததாரருமான சந்தோஷ் பட்டீலின் சடலம் நேற்று (ஏப்ரல் 12) உடுப்பியில் உள்ள விடுதியில் கண்டெடுக்கப்பட்டது.

‘நம்ம ஆர்எஸ்எஸ்’ என கூறிய கர்நாடக சபாநாயகர்: சபாநாயகர் பதவியை அவமதித்துவிட்டதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு

கர்நாடகாவில் பா.ஜ.க அரசு ஒப்பந்ததாரர்களிடம் அதிக லஞ்சம் கேட்பதாகவும், ஊழல் அதிகரித்து வருவதாகவும் குற்றம்சாட்டிய பல ஒப்பந்ததாரர்களில் சந்தோஷ் பட்டீலும் ஒருவர். அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா அரசு திட்டப்பணியில் 40% கமிஷன் கேட்பதாக சந்தோஷ் பட்டீல் ஏற்கனவே குற்றச்சாட்டுச் சுமத்தியிருந்தார்.

அமைச்சர் ஈஸ்வரப்பா வழங்கிய வாய்மொழி வாக்குறுதியின் அடிப்படையில் தனது கிராமத்தில் சாலைகள் அமைப்பதற்காக ரூ.4 கோடி முதலீடு செய்ததாக பாட்டீல் சில வாரங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. அமைச்சர் தன்னிடம் பொய் சொன்னதோடு, ஒப்பந்த முறைகேடுகளுக்கு அமைச்சர் ஈஸ்வரப்பா தான் பொறுப்பானவர் என்றும் சந்தோஷ் பாட்டீல் குற்றம் சுமத்தியிருந்தார்.

செங்கோட்டையில் காவிக் கொடி பறக்கும் – பாஜகவை எதிர்த்து கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் உள்ளிருப்பு போராட்டம்

பாஜக உறுப்பினராகவும், இந்து யுவ வாஹினி அமைப்பின் தேசிய செயலாளராகவும் சந்தோஷ் பாட்டீல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சந்தோஷ் பாட்டீல் மரணத்திற்குப் பிறகு, மாநில அரசு மற்றும் ஒன்றிய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாகச் சாடி வருகின்றன.

“கர்நாடகாவில் பாஜகவின் 40% கமிஷன் அரசாங்கம் தங்கள் சொந்த கட்சிக்காரர்களின் உயிரையே பறித்துள்ளது. சந்தோஷ் பாட்டீல் மரணத்திற்குப் பிரதமர் மோடியும், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையும் உடந்தையாக உள்ளனர். #BJPCorruption Files” என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தனது பதவியை ராஜினாமா செய்யக் கோரிய காங்கிரஸின் கோரிக்கையை அமைச்சர் ஈஸ்வரப்பா நிராகரித்துள்ளார். ஒப்பந்ததாரரின் மரணம் தொடர்பாக காவல்துறை “முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணை” நடத்தும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

காவிக்கொடி எதிர்காலத்தில் தேசியக் கொடியாக மாறலாம் – கர்நாடக பாஜக அமைச்சர்

“இது ஒரு கொலை, தற்கொலை அல்ல. பாஜக இதற்கு வெட்கப்பட வேண்டும் என்று அமைச்சர் ஈஸ்வரப்பாவை உடனே கைது செய்யுங்கள் என்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

ஈஸ்வரப்பா மீது இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக ஷிவமொக்கா மாவட்டத்தில் பஜ்ரங்தள் செயற்பாட்டாளரின் கொலை தொடர்பாகச் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக அவர் மீது கர்நாடக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Source : newindianexpress

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்