கர்நாடகாவில் உகாதி பண்டிகைக்கு முன்பு புதிய முதலமைச்சர் நியமகிக்கப்படுவாரென அம்மாநில பாஜக மூத்த தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான பசனகவுடா, எடியூரப்பாவை சீண்டும் வகையில் விமர்சித்ததாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.
கர்நாடகாவில் பிஜாபூர் தொகுதியின் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் பசனகவுடா பட்டில் யாட்நல்லைத் தொடர்ந்து முதலமைச்சர் எடியூரப்பா மீது அதிருப்பதியில் உள்ளார் சட்டப்பேரவை உறுப்பினர் பசனகவுடா, எடியூரப்பா மீதும் அவர் ஆட்சியில் நடைபெறும் நிர்வாகக் குறைப்பாடுகளையும் சுட்டிக்காட்டி தனது குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எங்களைப் பார்த்துப் பாஜகவின் பி டீம் என்பதா? – ஓவைசி கண்டனம்
இந்நிலையில், வரும் ஏப்ரல் 13ஆம் தேதி உகாதி பண்டிகைக்கு முன்பு கர்நாடகாவில் முதலமைச்சர் எடியூரப்பா மாற்றப்பபட்டு, புதிய முதலமைச்சர் தேர்ந்தெடுக்கப்படுவார். அதுவும் அந்த நபர் வட கர்நாடகாவில் இருந்துதான் தேர்ந்துதெடுக்கப்பட இருக்கிறாரென பசனகவுடா திட்டவட்டமாகக் கூறியதாக என்டிடிவி குறிப்பிட்டுள்ளது.
மகாத்மா காந்தி நினைவு நாள்: உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்க தலைவர்கள்
இதுகுறித்து பசனகவுடா பட்டில் தெரிவித்ததாவது, “நான் சட்டப்பேரவை உறுப்பினர் பொறுப்பிற்காக வெறும் கையை வீசிக் கொண்டு தேடமாட்டேன், மாறாக வட கர்நாடகவைச் சேர்ந்த எமது ஆட்களிலிருந்து ஒருவர் நிச்சயம் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்படுவர்” என அவர் கூறியதை என்டிடிவி பதிவு செய்துள்ளது.
நடைபெற்ற கடந்த பாஜக கட்சிக் கூட்டத்தில் எடியூரப்பாவிற்கும் பசனகவுடாவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கடுமையான மோதலில் முடிந்துள்ளது. மேலும் தனது நிர்வாகத்தில் எடியூரப்பா மகன் விஜயேந்தர தலையிடுவதாகவும் பசனகவுடா குற்றஞ்சாட்டியதாக என என்டிடிவி குறிப்பிட்டுள்ளது.
மியான்மரில் மீண்டும் ராணுவ ஆட்சி? – சுகியின் தேர்தல் வெற்றி குறித்து சந்தேகம் எழுப்பும் ராணுவம்
பொதுவெளியில் வெளிப்படையாக எடியூரப்பா அரசை விமர்சிக்க வேண்டாம் என்று பசனகவுடாவை மத்திய பாஜக தலைமை, பலமுறை அறிவுறுத்தி வந்தபோதிலும், கர்நாடகாவில் நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தில் கூட எடியூரப்பா நேர்மையின்றி செயல்பட்டதாக பசனகவுடா விமர்சித்ததாக என்டிடிவி தெவித்துள்ளது.
முன்னதாக, எடியூரப்பா வயதின் மூப்புக் காரணமாக அவரை மாற்றம் செய்வது குறித்து பாஜக தலைமை ஆலோசனை செய்துவருவதாக அக்கட்சியின் வட்டராங்கள் தெரிவித்து வருகின்றனர். மறபுறம் அந்தக் கூற்றை எடியூரப்பா அரசோ திட்டவட்ட மறுத்துள்ளது என்று என்டிடிவி கூறியுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.