Aran Sei

கர்நாடகா: நிவாரணம் வழங்குவதிலும் மதப் பாகுபாடும் காட்டும் பாஜக – காங்கிரஸ் விமர்சனம்

ர்நாடகாவில் கொலையான பாஜக உறுப்பினருக்கு நிவாரணம் தந்து காங்கிரஸ் உறுப்பினருக்கு நிவாரணம் தராத முதலமைச்சரின் நடவடிக்கை சட்டம் வகுத்திருக்கு எல்லோரும் (Article 14)  சமம் என்கிற சட்டகத்தை மீறுவதாக இருக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

பாஜக யுவமோர்ச்சா உறுப்பினர் பிரவீன் நெட்டாரு கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மங்களூருக்கு விரைந்தார். அவர் பிரவீனின் குடும்பத்தினரை சந்தித்து மாநில அரசின் நிவாரண நிதியில் இருந்து ரூ.25 லட்சம் காசோலையை வழங்கினார், மேலும் அவரை கொலை செய்தவர்கள் மற்றும் கொலைக்கு காரணமான அமைப்புகள் தண்டிக்கப்படுவார்கள் என்று உறுதியளித்தார்.

எல்கர் பரிஷத் வழக்கு: பெகாசஸ் உளவு மென்பொருள் பயன்படுத்தப்பட்டதை கவனத்தில் கொள்ளாத நீதிமன்றங்கள்

பிரவீனின் மரணம் ஆளும் பாஜக அரசை கவலையில் ஆழ்த்தியுள்ளது. பாஜக மாநிலத் தலைவரின் காரை போராட்டக்காரர்கள் வழி மறித்துள்ளனர். ஆர்எஸ்எஸ் கோட்டையாக கருதப்ப்படும் ஒரு பகுதியில் பிரவீன் கொலை நடைபெற்றுள்ளதால் பாஜகவினர் தங்களின் கட்சித் தலைவர்கள் மீது கோபத்தில் இருக்கின்றனர்.

பிரவீன் கொலை நடைபெற்ற ஒரு வாரத்திற்கு முன்பு, அதே பெல்லாரே காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மற்றொரு இளைஞன் கொல்லப்பட்டார் . உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதல்வரிடம் இருந்து அத்தகைய உத்தரவாதம் கிடைக்கவில்லை.

அம்பேத்கரியமும் பெரியாரியமும் பாஜகவை தோற்கடிக்க முக்கியமானவை – கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கருத்து

பத்தொன்பது வயதான மசூத் ஜூலை 19 அன்று அவரது வீட்டின் அருகே ஒரு குழுவினரால் தாக்கப்பட்டதால் உயிழிழந்தார்.  கேரளாவைச் சேர்ந்த ஒரு ஓவியர் அவர். எந்த அரசியல் அல்லது மத அமைப்பைச் சேராதவர். அவர் இப்போது அவரது தாயார் மற்றும் மூன்று சகோதரர்களுடன்  இருக்கிறார். இந்த கொலை தொடர்பாக 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர், அவர்கள் அனைவரும் விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் போன்ற இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள்

முதல்வர் பொம்மை மங்களூரு வருகிறார் என்று கேள்விப்பட்டவுடன், பிரவீன் குடும்பத்தை மட்டும் பார்க்காமல், மசூதின் குடும்பத்தையும் பார்க்க வேண்டும் என்று அறிக்கை கொடுத்தேன் என இந்திய ஜனநாயக வாலிபர் கூட்டமைப்பு மாநில தலைவர் முனீர் கடிபள்ளா தெரிவித்துள்ளார். . “பிரவீனின் குடும்பம் எப்படி துக்கத்தில் இருக்கிறதோ, அதே போலதான் மசூதின் குடும்பமும். முதல்வர் தனது கடமையைப் பின்பற்றியிருக்க வேண்டும், பாரபட்சம் காட்டக் கூடாது” என்று அவர் கூறியுள்ளார்

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்களும், மசூத்தின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்காமல் முதல்வர் பொம்மை பாகுபாடு காட்டுவதாக விமர்சித்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையாவும், மசூதின் குடும்பத்தை முதல்வர் பொம்மை ஏன் பார்க்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

சிறுபான்மையினரை 2 ஆம் தர மக்களாக நடத்துவது இந்தியாவை பிளவுபடுத்தும் – ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கருத்து

ஒரு குடும்பத்திற்கு மட்டும் நிதி இழப்பீடு வழங்காமல், மற்றொரு குடும்பத்திற்கு நிதி இழப்பீடு வழங்கியதன் மூலம், அரசியல் சாசனத்தின் 14-வது பிரிவை பொம்மையா மீறியுள்ளார் என மனித உரிமை வழக்கறிஞர் பி.டி.வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

Source: thenewsminute

திமுக பாஜக கூட்டணிக்கு சான்ஸே இல்ல I Constandine Interview I DMK I Aransei

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்