Aran Sei

கர்நாடகா: வலதுசாரிகளின் நெருக்கடிக்கு மத்தியிலும் கோயிலில் நாதஸ்வரம் வாசிக்கும் இஸ்லாமிய சகோதரர்கள்

ர்நாடக மாநிலத்தில் உள்ள கோயில் விழாக்களில் இஸ்லாமியர்கள் கடை போடக்கூடாது உள்ளிட்ட சம்பங்களுக்கு மத்தியில் உடுப்பியில் உள்ள ஸ்ரீ மாரியம்மா கோயிலில் ஷேக் ஜலீல் சாஹேப், ஷேக் அக்பர் சாஹேப் ஆகிய இரு இஸ்லாமிய இசைக்கலைஞர்கள் நாதஸ்வரம் வாசித்துள்ளார்.

கர்நாடகா: திருவிழாக்களில் இஸ்லாமியர்கள் கடைவைக்க தடை விதிக்கும் இந்துத்துவவாதிகளைக் கண்டித்த பாஜக எம்.எல்.ஏ

நேற்று (ஏப்ரல் 5) உடுப்பி மாவட்டத்தின் கௌப் நகரில் உள்ள மூன்றாவது மாரியம்மன் கோயிலில் ஷேக் ஜலீல் சாஹேப், ஷேக் அக்பர் சாஹேப் இரு சகோதரர்கள் நாதஸ்வரம் வாசித்துள்ளனர்.

“உடுப்பியில் உள்ள லட்சுமி ஜனார்த்தனா கோவிலில் தொடங்கிப் பல கோயில்களுக்கு நாங்கள் நாதஸ்வரம் வாசித்து வருகிறோம். 5 தலைமுறையாக கோயில்களில் இசைக்கலைஞர்களாக இருக்கிறோம். புனிதமான ரம்ஜான் மாதத்தில் நோன்பு இருந்தாலும் கூட, நாதஸ்வரத்தை வாசிப்பதற்கான பலத்தை எல்லாம் வல்ல இறைவன் எங்களுக்கு அளித்து வருகிறார்” என்று ஷேக் ஜலீல் சாஹேப் தெரிவித்துள்ளார்.

கர்நாடகா: இஸ்லாமிய வியாபாரிகள் மீது வலதுசாரிகளின் வகுப்புவாத தாக்குதல் – தெருவோர வியாபாரிகள் சங்கம் கண்டனம்

உடுப்பி மாவட்டத்தின் கௌப் நகரில் பழமையான லக்ஷ்மி ஜனார்த்தன கோயிலுக்கு எங்களது பெரியப்பா ஷேக் மத்தா சாஹேப் ஒரு ஏக்கர் நிலத்தைத் தானமாக வழங்கியுள்ளதாய் நினைவு கூர்ந்த ஷேக் ஜலீல் சாஹேப், லக்ஷ்மி ஜனார்த்தனா கோவில் திருவிழாக்களின் போது வருடத்திற்கு நான்கு மாதங்கள் நாதஸ்வரம் வாசிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Source : the hindu

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்