Aran Sei

கொரானா ஊரடங்கு தளர்விற்குப் பிறகு – வணிக நிறுவனங்கள் 24 மணி நேரம் செயல்பட அனுமதித்த கர்நாடகா

Image Credits: Economic Times

ர்நாடகாவில் பத்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் பணிபுரியும் அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களும் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை வேலைவாய்ப்பை உருவாக்குவதையும் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அரசு கூறியுள்ளது.

இது தொடர்பாகக் கர்நாடகா மாநில அரசு ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் ஒரு ஊழியரை ஒரு நாளில் 10 மணி நேரத்திற்கு மேல் பணியில் ஈடுபடும்படி நிர்பந்திக்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

தண்டாவளம் அருகே இறந்த கிடந்த கர்நாடக மேலவை உறுப்பினர் : தற்கொலை என காவல்துறை தகவல்

“எந்த நிறுவனமும் ஒரு நாளில் 8 மணி நேரத்துக்கு மேலாகவோ, ஒரு வாரத்தில் 48 மணி நேரத்துக்கு மேலாகவோ ஒரு ஊழியரைப் பணியமர்த்த கூடாது. கூடுதல் பணிநேரத்திற்காகக் கூட ஒரு எந்த ஒரு ஊழியருக்கு நாள் ஒன்றிற்கான பணி நேரம் 10 மணி நேரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து ஊழியர்களுக்கும் குறைந்தது ஒரு வார விடுமுறை வழங்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது. ஒரு ஊழியரை ஒரு நாளில் எட்டு மணி நேரத்திற்கு மேல் வேலை வாங்கினால் அவர்களுக்குக் கூடுதல் நேரத்திற்கான ஊதியத்தை வழங்க வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளை பாதிக்கும் பசு வதை தடுப்புச் சட்டம் – அமைதிக்கு காரணம் சாதியப் படிநிலையே

பெண் ஊழியர்களிடமிருந்து சாதாரண சூழ்நிலைகளில் எந்த நாளிலும் இரவு 8.00 மணிக்கு மேல் பணி செய்யும்படி நிர்பந்திக்க கூடாது என்று அரசு கூறியுள்ளது.

வேலை நேரம் தொடர்பான உத்தரவுகளை மீறும் நிறுவனங்கள் அல்லது மேலாளர்கள் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அரசு தெரிவித்துள்ளது.

அறிவிக்கப்பட்ட இப்புதிய முறை அடுத்த மூன்று ஆண்டுகளுக்குப் பொருந்தும் எனவும் மாநில அரசு கூறியுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்