Aran Sei

சசிகலாவை சந்திக்க முயற்சி: அதிமுகவின் கர்நாடக மாநில செயலாளரை கட்சிலிருந்து நீக்கிய ஓபிஎஸ், ஈபிஎஸ்

பெங்களூருவில் உள்ள சசிகலாவை சந்திக்க முயன்றதாக கூறி, அதிமுக கர்நாடக மாநில செயலாளர் யுவராஜ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக அறிவித்துள்ளது.

பெங்களூரு பரப்பன் அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா, ஜனவரி 27-ம் தேதி விடுதலையாகி, தற்போது ஓய்வில் உள்ளார். அவர் வரும் 7-ம் தேதி தமிழகம் திரும்ப உள்ளார்.

அதிமுகவைச் சேர்ந்த சசிகலாவின் ஆதரவாளர்கள் பலர், சசிகலாவின் விடுதலைக்கும் தமிழக வருகைக்கும் போஸ்டர்கள் வழியாக ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக, ஐந்துக்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

நான்காண்டு சிறைவாசத்துக்கு பின்னர் சசிகலா இன்று விடுதலை – அரசியல் விளைவு என்ன?

இந்நிலையில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் பழனிசாமி ஆகியோர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், கர்நாடக மாநில அதிமுக செயலாளரான எம்.பி. யுவராஜ், சசிகலாவை அவர் தங்கியுள்ள விடுதியில் சந்திக்க காத்திருந்ததாகவும், அதனால், அவர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்