Aran Sei

கர்நாடகா: ஹிஜாபை கழட்ட சொன்னதால் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாமல் வீட்டுக்கு திரும்பிய மாணவி

ர்நாடகாவில் இன்று (மார்ச் 28) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கிய நிலையில், பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள இல்கல் ஊரில் உள்ள பள்ளி நிர்வாகம் ஹிஜாப் அணிந்து வந்த ஒரு மாணவியின் ஹிஜாபை கழற்றுமாறு வலியுறுத்தியதை அடுத்து, அந்த மாணவி தேர்வை எழுதாமல் வீட்டுக்கு திரும்பியுள்ளார்.

கர்நாடகாவில் தொடங்கியது 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு – ஹிஜாபுடன் வந்தால் தேர்வு எழுத முடியாது என அரசு அறிவிப்பு

கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்த மாணவர்கள் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத அனுமதிக்கப் பட மாட்டார்கள் என மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் நாகேஷ் தெரிவித்திருந்த நிலையில், இன்று மாநிலத்தில் 10 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது.

இல்கல் ஊரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள தேர்வு மையத்தில் ஹிஜாப் அணிந்து வந்த ஒரு மாணவியை அவரது சகோதரர் 10 ஆம் வகுப்புத் தேர்வு எழுத அழைத்து வந்துள்ளார்.

கேரளா: இஸ்லாமியர் என்பதால் பரதநாட்டிய கலைஞர் மான்சியாவின் கோயில் நடன நிகழ்ச்சிக்கு தடை

அப்போது “பள்ளி நிர்வாகம் அந்த மாணவியின் ஹிஜாபை கழற்றுமாறு கூறியதற்கு அந்த மாணவி மறுத்துள்ளார். இதன் பின் அங்குள்ள ஆசிரியர்களிடம் அவளது சகோதரர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்” என்று பள்ளி அதிகாரிகள் கூறியுள்ளனர்..

ஆசிரியர்கள் விடாப்பிடியாக இருந்ததால், “ஹிஜாப் அணிந்த மாணவி தனது சகோதரரிடம் தன்னை வீட்டிற்கு அழைத்துச் செல்லும்படி கூறியுள்ளார்” என்று பள்ளி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹிஜாப் உள்ளிட்ட விவகாரங்களில் பெண்கள் குறிவைக்கப்படுவதை நிறுத்துங்கள் – பிரபஞ்ச அழகி ஹர்னாஸ் சந்து

 

கர்நாடகா முழுவதும், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறுவதால் அனைத்து தேர்வு மையங்களிலும், தேர்வு அறைக்குள் நுழைவதற்கு முன்பு ஹிஜாபை கழற்றுவதற்கு ஒரு அறை ஒதுக்கப்பட்டிருந்தது.

கர்நாடகா முழுவதும் 3,444 மையங்களில் சுமார் 8.73 லட்சம் மாணவர்கள் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ளனர். அனைத்து தேர்வு மையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்று கர்நாடக பள்ளிக் கல்வித் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

 

Source : The Hindu

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்