Aran Sei

கர்நாடகா மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகள் தடுப்பாடு – பேருந்துகளை படுக்கைகளாக மாற்றிய அரசு

ர்நாடகா மாநிலத்தில் நாளொன்றுக்கு 40 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா தொற்று பதிவாகி வரும் நிலையில், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகளுக்குப் பற்றாக்குறை  ஏற்பட்டுள்ளது.

இதனைச் சமாளிக்கும் வகையில் ஆக்சிஜன் பேருந்துச் சேவைகளைக் கர்நாடக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் இந்தச் சேவையைத் துவக்கி வைத்தப்பின் பேசிய முதலமைச்சர் எடியூரப்பா, ”கொரோனா தொற்று பாதிப்பால், ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட மரணங்கள் மாநிலத்திற்கு ஆறாத காயங்களை ஏற்படுத்தியுள்ளது. இனி இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் ஆக்சிஜன் பேருந்துச் சேவை உருவாக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

தேர்தல் பணியின்போது கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ஒரு கோடி இழப்பீடு – அலகாபாத் நீதிமன்றம்

”மருத்துவமனைகளுக்கு வெளியே ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருக்கும் நோயாளிகளைக் காப்பாற்றும் வகையில், இந்தப் பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பேருந்துகளிலும் 8 ஆக்சிஜன் சிலிண்டர்கள் கொண்ட படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல்கட்டமாக 20 மாநகராட்சி பேருந்துகள் ஆக்சிஜன் சேவை பேருந்துகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காத நோயாளிகள், ஆக்சிஜன் கிடைக்காமல் தவிப்போரை இந்தப் பேருந்துகள் விரைந்து சென்று காப்பாற்றும். முதல்கட்டமாக பெங்களூரு அரசு மருத்துவமனைகளில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்திற்குள் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்” என எடியூரப்பா கூறினார்.

Source : The Hindu Tamil

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்